சந்தம் (ஒலி)

சந்தம் (Prosody) என்ற சொல், பல்பொருள் ஒரு மொழி ஆகும். இங்கு ஒலியின் வண்ணம், அழகு என்றே பொருள் குறிப்பிடப்படுகிறது. சந்திக்கும் தன்மை சந்தமாகும். ஒலி, அலை போல் மீண்டும் சந்திப்பதால் இதற்குச் சந்தம் என்ற பொருள் வந்தது என்று தமிழிசைக் கலைக்களஞ்சியம் (தொ.II,ப.274) குறிப்பிடுகின்றது.‘சந்தஸ்’ என்ற வடசொல்லின், திரிபாகவும் கூறுவர். (முனைவர். இ. அங்கயற்கண்ணி, திருப்புகழ்ப் பாடல்களில் சந்தக் கூறுகள் பக்கம்.362). இதனைத் தொல்காப்பியர், வண்ணம் என்கிறார் . எனவே, சந்தம் என்ற சொல்லிற்கு வண்ணம் என்ற தமிழ்ச்சொல்லைச் சொல்லுதலே சாலச்சிறந்தாம். கர்நாடக இசைக் கலைஞர்கள், சந்தம் என்றே சொல்லுகின்றனர்.இந்திய பாரம்பரிய இசை இயல்பில் பாடும் திறனானது, மெல்லிசை ரீதியாக குறிப்பிட்ட ராகங்கள் மற்றும் சந்தம் ரீதியாக தாளங்கள் அடிப்படையிலானது ஆகும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தம்_(ஒலி)&oldid=2745591" இருந்து மீள்விக்கப்பட்டது