அருணாச்சல பிரதேசத்தில் கல்வி
அருணாச்சல பிரதேச மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களால் படிப்படியாக முன்னேறி வருகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள உள்ளூர் அரசு சார்பற்ற அமைப்புகளால் தொலைதூரப் பகுதிகளில் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திசம்பர் 2020 இன் அறிக்கையின்படி அருணாச்சலப் பிரதேசத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 82.93% ஆகும்.
பள்ளிக் கல்வி
தொகுஅருணாச்சலப் பிரதேசத்தில் பள்ளிக் கல்வி 10+2 எனும் முறையினைப் பின்பற்றுகிறது. பள்ளிக் கல்வியின் ஆரம்ப நிலையானது தரநிலை 1 முதல் 5 வரை, நடுத்தர நிலை 6 முதல் 8 வரை மற்றும் இரண்டாம் நிலை 9 முதல் 10 வரை உள்ளடங்கியது. வகுப்புகள் 11-12 வரை உயர்நிலைக் கல்வி நிலையின் கீழ் வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் மாநில அரசு 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறது. மாநிலத்தில் பல முன்-தொடக்கப் பள்ளிகள், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
உயர் கல்வி
தொகுஅருணாச்சல பிரதேசத்தில் உயர்கல்வி வழங்கும் சில புகழ்பெற்ற நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் வடகிழக்குப் பிராந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NERIST) மாநிலத்தில் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை உயர்த்துவதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலுடன் இந்திரா காந்தி தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஹிமாலயன் பல்கலைக்கழகம் ஆகியவை UGC சட்டம் 1956 பிரிவு 2 f இன் கீழ் அருணாச்சலப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. [1] [2]
பயிற்று மொழி
தொகுஅருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழினுட்பக் கல்வி நிறுவனங்களின் முதன்மையான பயிற்று மொழி ஆங்கிலம் ஆகும்.
சான்றுகள்
தொகு- ↑ "UGC ACT 1956". University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 3 May 2013.
- ↑ "State Approval" (PDF). Arunachal Pradesh Gazette. பார்க்கப்பட்ட நாள் 10 May 2013.