அருப்புக்கோட்டை ஶ்ரீமத் ஏனாதிநாத நாயனார் திருமடாலயம்

ஏனாதி நாத நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.சோழநாட்டிலே எயினனூரிலே தோன்றியவர். புரட்டாசி மாதம் உத்திராட நட்சத்திரம் அன்று சிவபெருமான் ஏனாதிநாதருக்கு எதிரே தோன்றி, பகைவனுடைய கையிலுள்ள வாட்படையினால் பாசம் அறுத்த உயர்ந்த அன்பராகிய ஏனாதிநாதரை உடன்பிரியாப் பேறளித்து மறைந்தருளினார்.


இவர் பெருமை அறிந்த அருப்புக்கோட்டை பெ.சிவ.பெருமாள் நாடார் 1901 ஆம் ஆண்டு ஶ்ரீமத் ஏனாதிநாத நாயனார் திருமடாலயம் நிறுவி, ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் உத்திராட நட்சத்திரம் அன்று அன்ன தானம் (குரு பூஜை) நடைபெற்று வருகிறது. அவரது 5ஆம் தலைமுறை 123ஆம் ஆண்டு சைவ தொண்டில் பயணிக்கிறார்கள்.