அருள்தந்தை நியூட்டன் அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி

அருள்தந்தை நியூட்டன் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியில் உள்ள ஒரு பழமையான அருங்காட்சியகம் ஆகும்.

வரலாறு

தொகு

இந்த அருங்காட்சியகம் 1883 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் காப்பாளர்களில் ஒருவராக இருந்த அருள்தந்தை வின்சட் நியூட்டனின் (1870-1949) நினைவாக அருங்காட்சியகத்துக்கு அவரது பெயர் இடப்பட்டது.

சிறப்புகள்

தொகு

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் காணப்பட்டு தற்போது இங்கு அற்றுவிட்ட கானமயில் இந்த அருங்காட்சியகத்தில் பாடம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.[1] பல பாம்பினங்கள் இங்கு பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நூல்

தொகு

புனித சூசையப்பர் கல்லூரியின் 175 ஆம் ஆண்டு நிறைவை (2018) ஒட்டி இந்த அருங்காட்சியகம் குறித்த விரிவான தகவல்களைக் கூறும் நூலை தாவரவியலாளர் முனைவர் ஜான்பிரிட்டோ தொகுத்து எழுதி வெளியிட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "இயற்கையின் பேழையிலிருந்து! 1: தமிழ்நாட்டின் கடைசி கானமயில்!". 2023-09-16. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "இயற்கையின் பேழையிலிருந்து! 2: பாம்புப் பாதிரியார்". 2023-09-23. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)