அரு. இலட்சுமணன்
அருணாச்சலம் இலட்சுமணன் (Arunachalam Lakshmanan, சுருக்கமாக A. R. Lakshmanan, 22 மார்ச்சு 1942 - 27 ஆகத்து 2020) இந்திய உச்ச நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ஆவார். 2006 முதல் 2009 வரை இந்திய சட்டக் குழுவின் தலைவராக இருந்தார்.
அரு. இலட்சுமணன் A. R. Lakshmanan | |
---|---|
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 20 திசம்பர் 2002 – 22 மார்ச் 2007 | |
தலைவர், 18-வது இந்திய சட்ட ஆணையம் | |
பதவியில் 2006–2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. | 22 மார்ச்சு 1942
இறப்பு | ஆகத்து 26, 2020 | (அகவை 78)
குடியுரிமை | இந்தியன் |
துணைவர் | மீனாட்சி ஆச்சி |
பிள்ளைகள் | எல்.அருணாச்சலம் ஏஆர்.எல்.சுந்தரேசன் |
பெற்றோர் | அருணாச்சலம் செட்டியார் |
தேவகோட்டையைச் சேர்ந்த இலட்சுமணன் சென்னையில் கல்வி பயின்றார். 1968 ஆம் ஆண்டில் வழக்குரைஞராகப் பதிவானார். அரசுத் தரப்பு வழக்குரைஞராகவும், பல வங்கிகளில் சட்ட ஆலோசகராகவும் பதவி வகித்தார். பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த சட்டம் பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழ் நாடு அரசு இலக்சுமணனை அமர்த்தியது. சென்னை உயர்நீதி மன்றத்திலும், கேரளா உயர்நீதி மன்றத்திலும் நீதிபதியாகவும் பின்னர் இராசஸ்தான் உயர்நீதி மன்றத்தில் முதன்மை நீதிபதியாகவும் அமர்த்தப் பட்டார். ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் முதன்மை நீதிபதியாக இருந்தார். 2002 திசம்பர் அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப் பட்டார். 2007 மார்ச்சு மாதம் ஒய்வு பெற்றார். உச்ச நீதிமன்றம் இவரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ் நாடு அரசின் பிரதிநிதியாக அமர்த்தியது.