அரேகிருசுணா மாலிக்கு

இந்திய அரசியல்வாதி

அரேகிருசுணா மாலிக்கு (பிறப்பு 4 ஆகஸ்ட் 1931) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1931 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசாவைச் சேர்ந்த இவர் பிராங்கிருசுணா மற்றும் பிரணலதா மாலிக்கு தம்பதியரின் மகனாவார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். சனதா கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] [2] [3] [4]

அரேகிருசுணா மாலிக்கு
Harekrushna Mallick
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1978–1984
தொகுதிஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-08-04)4 ஆகத்து 1931
அரசியல் கட்சிசனதா கட்சி
துணைவர்மானசி மாலிக்கு
மூலம்: [1]

மாலிக்கின் உடன்பிறப்புகள் கோபிநாத், உபேந்திரநாத், பரமானந்தா மற்றும் புவி இயற்பியலாளர் குமரேந்திர மாலிக்கு ஆகியோராவர். இவரது பெயரன் அபிசேக்கு மகாநந்தா ஒடிசாவைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியாவார். மாநிலங்களவையில் வைரச் சந்திர மகந்தி, சுரேந்திர மொகந்தி மற்றும் லக்சுமண மகாபாத்ரோ ஆகியோரின் சமகாலத்திய அரசியல்வாதியான அரேகிருசுணா தனது பதவிக்காலத்தில் அணு எரிபொருள்கள், அகதிகள் குடியேற்றம், காலநிலை, கலை மற்றும் சினிமா போன்ற பல்வேறு விவகாரங்களில் 500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட விவாதங்களில் பங்கேற்றுள்ளார். [5]

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
  2. Joint Committee on Mental Health Bill, 1978: evidence. Lok Sabha Secretariat. https://books.google.com/books?id=NrJFAQAAIAAJ. பார்த்த நாள்: 23 June 2020. 
  3. Parliamentary Debates: Official Report. Council of States Secretariat. https://books.google.com/books?id=LV9PAQAAMAAJ. பார்த்த நாள்: 23 June 2020. 
  4. "Rajyasabha Member information system". பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
  5. "Rajya Sabha Official Debates: Browsing RSdebate". பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேகிருசுணா_மாலிக்கு&oldid=3820725" இலிருந்து மீள்விக்கப்பட்டது