அர்ஃபா மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா

அர்ஃபா மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா (Arfa Software Technology Park) பாக்கித்தான் நாட்டின் லாகூர் நகரிலுள்ள ஒரு வானாளாவிய கட்டடமாகும். முன்னதாக இது மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா என அறியப்பட்டது. இத்தகவல் தொழில்நுட்பப் பூங்கா 2009 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. [1] [2] [3] தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் பஞ்சாப் தகவல் தொழில்நுட்ப வாரியமும் இங்கு இடம்பெற்றுள்ளன. பிரதான கட்டிடம் 17 மாடிகளைக் கொண்டுள்ளது மற்றும் 106 மீட்டர் உயரம் கொண்டது. [4] இது தற்போது லாகூரில் உள்ள மிக உயரமான கட்டிடம் ஆகும்.

அர்ஃபா மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா
Arfa Software Technology Park
அர்ஃபா மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா
Map
மாற்றுப் பெயர்கள்மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
முகவரி346-பி, பெரோசுபூர் சாலை
நகரம்லாகூர்
நாடுபாக்கித்தான்
ஆள்கூற்று31°28′31″N 74°20′35″E / 31.475357°N 74.343064°E / 31.475357; 74.343064
அடிக்கல் நாட்டுதல்3 சூலை 2006
துவக்கம்9 பிப்ரவரி 2012
உரிமையாளர்பஞ்சாப் தகவல் தொழில்நுட்ப வாரியம்
உயரம்106m (348 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை17
வலைதளம்
Arfa Software Technology Park

15 ஜனவரி 2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று பஞ்சாப் முதலமைச்சர் மியான் சாபாசு செரீப் , 16 வயதில் இறந்த மைக்ரோசாப்ட் சான்றளிக்கப்பட்ட இளைய தொழில் வல்லுநர் அர்ஃபா கரீமு நினைவாக மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவின் பெயரை அர்ஃபா மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவாக மாற்றுவதாக அறிவித்தார் [5] [6]

மேற்கோள்கள் தொகு

  1. "Lahore Technology Park (Software Park) almost completed". TechLahore. 20 August 2010. பார்க்கப்பட்ட நாள் 4 February 2012.
  2. "Another Software IT Park in Lahore, Converts Shaheen Complex". Propakistani.pk. 9 July 2009. பார்க்கப்பட்ட நாள் 4 February 2012.
  3. "Welcome to Software Technology Park, Lahore". Stp.pitb.gov.pk. 3 July 2006. பார்க்கப்பட்ட நாள் 4 February 2012.
  4. "Top 20 Tallest Buildings in Pakistan". பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  5. "Arfa's death funeral". 15 January 2012. http://www.pakistantoday.com.pk/2012/01/rip-arfa/. பார்த்த நாள்: 16 January 2012. 
  6. "Software Technology Park name changed to Arfa Karim Technology Park and one of the main highlights here is the working of Mr Taimoor Ali who is well known in Pakistan for his database management and administrative skills". 16 January 2012. http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=87791&Cat=2. பார்த்த நாள்: 16 January 2012.