அர்கா நீல்கிரன் மாம்பழம்

அர்கா நீல்கிரன் என்பது ஒரு கலப்பு ஒட்டு இரக மா வகையாகும். இது அல்போன்சா மற்றும் நீலம் மாம்பழ இரகங்களைக் கொண்டு இனச்சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்ட மா வகையாகும். இம்மரம் ஆண்டு தோறும் சீரான விளைச்சல் தரக்கூடியது. நீலம் போல நடுத்தர எடையுடனும், நல்ல இருப்புத்தன்மை கொண்டது. நீலத்தைப்போல பின்பட்ட இரகமாகும். நீலத்தைவிட அதிக மகசூல் தரும் இரகமாகவும் உள்ளது. பழத்தின் நிறம் மஞ்சளுடன் சிவப்பு கலந்த எடுப்பான தோற்றம் உடையது. நல்ல சதைப்பற்றுடன் சாறு நிறைந்தது.

உசாத்துணை

தொகு
  • ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர், கிருட்டிணகிரி, தர்ம்புரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.

வெளியிணைப்புகள்

தொகு