அர்குரைட்டு

கனிமம்

அர்குரைட்டு (Arquerite) என்பது (Ag,Hg) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இது பாதரசத்துடன் வெள்ளி சேர்ந்து இயற்கையாக உருவாகும் ஒரு கலப்புலோகமாகும்.[2] அர்குரைட்டு மிகவும் அரிதான கனிமமாகும். இதில் வெள்ளி நிறைந்த பல்வேறு வகையான இரசக்கலவைகள் உள்ளன. 87% வெள்ளி மற்றும் 13% பாதரசம் தனிமங்களால் இக்கலப்புலோகம் ஆனதாகும். சிலியில் இரண்டு இடங்களிலும் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவில் இரண்டு இடங்களிலுமாக உலகளவில் நான்கு இடங்களில் மட்டுமே அர்குரைட்டு கிடைக்கும் இடங்கள் பதிவாகியுள்ளன.[4] அர்குரைட்டின் மற்ற பெயர்கள் அர்கெண்டைல் பாதரசம், பாதரச வெள்ளி மற்றும் வெள்ளி இரசக்கலவை என்பனவாகும்.[2]

அர்குரைட்டு
Arquerite
பொதுவானாவை
வகைதாயகத் தனிம கனிமங்கள்
வேதி வாய்பாடு(Ag,Hg)
இனங்காணல்
நிறம்வெள்ளி-வெண்மை
படிக அமைப்புகனசதுரம்
மேற்கோள்கள்[1][2][3]

கிடைக்கும் இடங்கள்

தொகு

கனடா

தொகு
  • வைட்டல் கிரீக்கு, ஒமெனிகா சுரங்கப் பிரிவு, பிரிட்டிசு கொலம்பியா, கனடா
  • குவானிகா கிரீக்கு பிளேசர்கள், குவானிகா கிரீக்கு, ஒமெனிகா சுரங்கப் பிரிவு, பிரிட்டிசு கொலம்பியா, கனடா

சிலி

தொகு
  • லா ரோசில்லா சுரங்கம், எர்பாசுஸ் பியூனாசு, செரோ பிளாங்கோ மாவட்டம், கோபியாபோ மாகாணம் , அட்டகாமா பிராந்தியம், சிலி
  • அர்குரசு வெள்ளி வெட்டும் சுரங்க மாவட்டம், இலா செரினா, எல்குயி மாகாணம், கோகியும்ப்போ மண்டலம், சிலி [5]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்குரைட்டு&oldid=4134546" இலிருந்து மீள்விக்கப்பட்டது