அர்ச்சனா கிரிசு கமத்
அர்ச்சனா கிரிசு கமத் (Archana girish kamath) ஓர் இந்திய மேசைப் பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 17இல் இவர் பிறந்தார்.
மேசைப்பந்து வி.வீராங்கனை | |||||||||||||||||
குடியுரிமை | இந்தியர் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதக்கத் தகவல்கள்
|
2015 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் நடைபெற்ற மேசைப்பந்து போட்டியில் காலிறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் மேசைப்பந்து போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன் சுற்று வரை தகுதி பெற்றார். மியான்மரில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் மேசைப் பந்தாட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
வாழ்க்கைப் பின்னணி
தொகுஅர்ச்சனா கமத் தனது ஒன்பது வயதில் மேசை பந்தாட்ட விளையாட்டை தொடங்கினார். இவரது பெற்றோர்களான கிரிசு மற்றும் அனுராதா கமத் இருவரும் பெங்களுருவைத் தளமாகக் கொண்ட கண் மருத்துவர்களாவர்.
சாதனைகள்
தொகு- 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரத்தின் படி அர்ச்சனா கமத் உலக மேசைபந்து வீராங்கனைகள் பட்டியலில் 135 ஆவது இடத்தில் உள்ளார்.[1]
- அர்ச்சனா 2011 ஆம் ஆண்டில் தனது முதல் 12 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டோருக்கான மேசைப் பந்தாட்ட போட்டிகளில் கர்நாடக மாநில பட்டத்தை வென்றார். மேலும் இம்மாநிலத்தின் துணை இளையோர் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். கர்நாடக மாநிலத்தில் 15 வயது, 18 வயது மற்றும் 21 வயதுக்கு உட்பட்டோர் போட்டிகள் மற்றும் ஒற்றையர் மேசைப்பந்தாட்டப் போட்டி என்ற நான்கு தலைப்புகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசியப் போட்டிகளில் ஒற்றையர் போட்டியில் தங்கப் பதக்கமும் இரட்டையர் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.[2]
- 2014 ஆம் ஆண்டு பன்னாட்டு மேசைப் பந்தாட்ட கூட்டமைப்பு போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு விளையாடினார். இவர் பங்கேற்ற இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.[2]
- 2018 ஆம் ஆண்டு அர்கெந்திணாவின் புவெனசு அயர்சு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். அப்போட்டியில் அரையிருதிக்கு வந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kamath Archana Girish: ranking history (ITTF)". tabletennis.guide. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
- ↑ 2.0 2.1 Bangalore, Jain College. "Archana Kamath – an International Table Tennis Player". Site Name, i.e. Jain College (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.