அர்ச்சூன் எரிகாய்சி

அர்ச்சூன் எரிகாய்சி (Arjun Erigaisi) ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் நாள் பிறந்தார்[2]. 14 ஆண்டுகள் 11 மாதங்கள் 13 நாட்கள் என்ற சிறிய வயதிலேயே எரிகாசி கிராண்டு மாசுட்டர் பட்டத்தை வென்றார். இப்பட்டத்தை வென்ற குறைந்த வயது சிறுவர்கள் வரிசையில் இவருக்கு 31 ஆவது இடமாகும்.

அர்ச்சூன் எரிகாய்சி
Arjun Erigaisi
நாடுஇந்தியா
பிறப்பு2003 செப்டம்பர் 3
எலோ தரவுகோள்2531 (செப்டம்பர் 2018)[1]

அர்ச்சூன் இந்திய நாட்டின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவராவர்[3]. கிராண்டு மாசுட்டர் பட்டத்தை வென்ற இம்மாநிலத்தின் முதலாவது நபரும் அர்ச்சூன் எரிகாய்சியேயாகும். 2018 ஆகத்து மாதத்தில் அர்ச்சூன் இச்சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக 2015 ஆம் ஆண்டு கொரியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியிலும் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்[4]

மேற்கோள்கள்தொகு

  1. Administrator. "Erigaisi Arjun FIDE Chess Profile - Players Arbiters Trainers". பார்த்த நாள் 20 October 2018.
  2. "Erigaisi Arjun chess games and profile - Chess-DB.com". பார்த்த நாள் 20 October 2018.
  3. "Arjun Erigaisi’s fast-track to GM title". பார்த்த நாள் 20 October 2018.
  4. Subrahmanyam, V. V. (2 August 2016). "Hanamkonda boy set to create ripples in chess world". பார்த்த நாள் 20 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சூன்_எரிகாய்சி&oldid=2959844" இருந்து மீள்விக்கப்பட்டது