அர்ஜுன் ரெட்டி

2017 இந்திய தெலுங்கு திரைப்படம்

அர்ஜுன் ரெட்டி 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத் திரைப்படத்தை சந்தீப் வாங்கா எழுதி, இயக்கியுள்ளார். அவரது சகோதரர் பிரனய் ரெட்டி வாங்காவின் நிறுவனமான பத்ரகாளி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ராகுல் ராமகிருஷ்ணா, ஜியா சர்மா, சஞ்சய் ஸ்வரூப், கோபிநாத் பட், கமல் காமராஜு மற்றும் காஞ்சனா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது கோப மேலாண்மை சிக்கல்களைக் கொண்ட குடிகார அறுவை சிகிச்சை நிபுணரான அர்ஜுன் ரெட்டி தேஷ்முக்கை (தேவரகொண்டா) பற்றிய கதையாகும். அர்ஜுன் தனது காதலி ப்ரீத்தி ஷெட்டி (பாண்டே) திருமணத்திற்குப் பிறகு தன்னைத் தானே அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறான். இத்திரைப்படம் அர்ஜுனின் வீழ்ச்சி மற்றும் அடுத்தடுத்த எழுச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது.

அர்ஜுன் ரெட்டி
சுவரிதழ்
இயக்கம்சந்தீப் வாங்கா
தயாரிப்புபிரனய் ரெட்டி வாங்கா
கதைசந்தீப் வாங்கா
இசைராதன் மற்றும் ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர்
நடிப்புவிஜய் தேவரகொண்டா
ஷாலினி பாண்டே
ஒளிப்பதிவுராஜ் தோட்டா
படத்தொகுப்புசஷாங்க் மாலி
கலையகம்பத்ரகாளி பிக்சர்ஸ்
வெளியீடு25 ஆகத்து 2017 (2017-08-25)
ஓட்டம்186 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
மொத்த வருவாய்510 மில்லியன்[2]

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் கதை பிசியோதெரபி மாணவராக இருந்த வாங்காவின் வாழ்க்கையில் ஓரளவு ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இயக்குநர் இரண்டு வருடங்கள் இத்திரைப்படத்தின் கதையில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு திரைப்படத்தை எடுப்பதற்காக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆனது. முதன்மையாக இத்திரைப்படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணி 20 ஜூன் 2016 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. மொத்த திரைப்படமும் எடுக்க 86 வேலை நாட்கள் ஆனது. ஹைதராபாத் மட்டுமல்லாது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் மங்களூர், டெஹ்ராடூன் மற்றும் புது தில்லியிலும், வெளிநாட்டு படப்பிடிப்பு இத்தாலியிலும் நடைபெற்றது. இத்திரைப்படத்திற்கு ராதன் மற்றும் ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர் முறையே பாடல்கள் மற்றும் பின்னனி இசை அமைத்துள்ளனர். ராஜ் தோட்டா புகைப்படக்கலை இயக்குநராகவும், சஷாங்க் மாலி படத்தின் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இத்திரைப்படம் 40—51.5 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டது.[3] இப்படம் இந்தியாவின் மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவிலிருந்து 'ஏ' (வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம்) சான்றிதழைப் பெற்ற பின்னர் 25 ஆகஸ்ட் 2017 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. வெளியீட்டிற்குப் பிறகு இப்படம் அதன் இயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு மற்றும் நடிகர்களின் நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கங்களை ஊக்குவிப்பதாகவும், காதல் காட்சிகளுக்காகவும் எதிர்மறையான விமர்சனங்களை இத்திரைப்படம் பெற்றது. எதிர்மறையான விமர்சனங்கள் பெற்ற போதும் படம் வசூல் சாதனைப்படைத்தது. உலகளவில் 510 மில்லியன் இந்திய ரூபாயை வசூலித்தது. அதில் விநியோகஸ்தர்களின் பங்கு 260 மில்லியன் இந்திய ரூபாய்.[2] படம் 65 வது தென்னக பிலிம்பேர் விருதுகள் விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைகளைப் பெற்றது. இதில் சிறந்த தெலுங்குத் திரைப்படம், சந்தீப் வாங்காவுக்கான சிறந்த தெலுங்கு இயக்குனர் மற்றும் தேவரகொண்டாவுக்கான சிறந்த தெலுங்கு நடிகர் ஆகியவை அடங்கும்.

நடிகர்கள்தொகு

 • அர்ஜுன் ரெட்டி தேஷ்முக் - விஜய் தேவரகொண்டா
 • ப்ரீத்தி ஷெட்டி - ஷாலினி பாண்டே
 • சிவா - ராகுல் ராமகிருஷ்ணா
 • ஜியா சர்மா - ஜியா சர்மா
 • தனுஞ்சய் ரெட்டி தேஷ்முக்(அர்ஜுனின் தந்தை) - சஞ்சய் ஸ்வரூப்
 • கவுதம் ரெட்டி தேஷ்முக்(அர்ஜுனின் சகோதரர்) - கமல் கமராஜு
 • அர்ஜுனின் பாட்டி - காஞ்சனா
 • தேவதாஸ் ஷெட்டி(ப்ரீதியின் தந்தை) - கோபிநாத் பட்
 • கமல் - கல்யாண் சுப்ரமண்யம்
 • அமித் - அமித் சர்மா
 • வித்யா - அதிதி மயக்கல்
 • கீர்த்தி - அனிஷா அல்லா
 • ஷ்ருதி(ப்ரீதியின் தோழி) - ஸ்ரவ்யா மிருதுலா
 • பூஷன் கல்யாண் - புனித மேரி கல்லூரியின் டீன்
 • விப்புல் - பிரியதர்ஷி புலிகொண்டா (சிறப்புத் தோற்றம்)

மறு ஆக்கம்தொகு

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இந்தி மொழியில் வங்கா கபீர் சிங் எனும் பெயரில் மறு ஆக்கம் செய்துள்ளார்.[4] இத்திரைப்படம் 21 ஜூன், 2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்தப் படம் தமிழில் வங்காவின் முன்னாள் உதவியாளர் கிரீசாயாவால் ஆதித்யா வர்மா எனும் பெயரில் மறு ஆக்கம் செய்து 22-10-2019 அன்று வெளியிடப்பட்டது. .[5] ஜூன் 2019 இல் தயாரிப்பாளர் எஸ்.நாராயண் இத்திரைப்படத்தின் கன்னட மறு ஆக்க உரிமையை வாங்கினார்.[6]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_ரெட்டி&oldid=2967792" இருந்து மீள்விக்கப்பட்டது