அர்த்த பஞ்சக வியாக்கியானம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அர்த்த பஞ்சக வியாக்கியானம் என்பது மணவாள மாமுனி எழுதிய ஒரு விரிவுரை நூல். பிள்ளை லோகாச்சாரியர் 18 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றை ‘அஷ்டாதச ரகசியம்’ என்பர். அவற்றில் மூன்றிற்கு ஸ்ரீமத்மணவாளமாமுனிகள் விரிவுரை எழுதியுள்ளார். இந்த அர்த்த பஞ்சகம் என்ற ரகஸ்ய நூலுக்கு ஸ்ரீமத்பிள்ளைலோகம் ஜீயர் வ்யாக்யாநம் செய்துள்ளார்.
- பொருளுணர்ந்துகொள்ள வேண்டிய கருத்துகள் ஐந்து. இதனை ‘அர்த்த பஞ்சகம்’ என்கின்றனர்.
அவை
- உலகின் நிலை (ஸ்வரூபம்)
- இறைவன் நிலை (பர ஸ்வரூபம்)
- உயிர் இறைவனை அடையமுடியாமல் தடைசெய்யும் வினை நிலை (விரோதி ஸ்வரூபம்)
- உயிர் இறைவனை அடைய வேண்டியநிலை (புருஷார்த்த ஸ்வரூபம்)
- வீடு பேறு அடையத் தடை நீக்கிய நிலை (உபாய ஸ்வரூபம்)
இந்த ஐந்தினை விளக்கும் பிள்ளை லோகாச்சாரியாரின் நூல் 49 வாக்கியங்களாக அமைந்துள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு விரிவுரை கூறுவது ஸ்ரீமத்பிள்ளைலோகஞ்ஜீயர் செய்த அர்த்த பஞ்சக வியாக்கியானம்.
- இந்த நூல் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது.
- எடுத்துக்காட்டு
- யமம் ஆவது பாஷ்ய இந்திரிய நிக்கிரகம்
- நியமம் ஆவது அந்தர் இந்திரிய நிக்கிரகம்
- இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005