மணவாளமாமுனி

(மணவாள மாமுனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மணவாள மாமுனிகள் (Manavala Mamunigal) என்று அறியப்படும் அழகிய மணவாளன் (Alagiya Manavalan) (1370–1450) வைணவப் பெரியார்களுள் ஒருவர். இராமானுசர் மற்றும் நம்மாழ்வாரோடு ஒப்பு வைத்தெண்ணப்படுபவர்.[தெளிவுபடுத்துக] இவர் பொ.ஊ. 1370 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி பகுதியில் அழகியமணவாள பெருமாள் நாயனார் எனும் இயற்பெயருடன் பிறந்தார். 73 திருநட்சத்திரம் (ஆண்டுகள்) வரை உயிர் வாழ்ந்தார்.

மணவாளமாமுனி
பிறப்புபொ.ஊ. 1370
ஆழ்வார்திருநகரி, தமிழ்நாடு
இறப்புபொ.ஊ. 1443
தமிழ்நாடு
இயற்பெயர்அழகியமணவாள பெருமாள் நாயனார்
தத்துவம்விசிஷ்டாத்வைதம்
குருதிருவாய்மொழிப்பிள்ளை, சுவாமி இராமானுசர்

பதினாறு வயதினில் மணம் முடிக்கும் முன் வேத, வேதாந்தங்களையும், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும் தன்னுடைய தந்தையிடமும் தாத்தாவிடமும் கற்றார்.

தமிழகத்தில் வைணவத்தைப் பரப்பும் பொருட்டு இவர் வானமாமலை ஜீயர் உள்ளிட்ட ஜீயர் பொறுப்புகளையும், அஷ்டதிக் கஜங்களையும் (எட்டுப்பேர் அடங்கிய குழு) உருவாக்கினார்.[சான்று தேவை]

  • தந்தை – திருநாவீறு உடையபிரான் தாசரண்ணர்
  • ஆசிரியர் – ‘திருவாய்மொழிப் பிள்ளை’ எனச் சிறப்புப்பெயர் பெற்றிருந்த திருமலையாழ்வார்.
  • மகன் - இராமானுஜன்,

சுவாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்திக் கொண்ட இவர், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.[சான்று தேவை]

யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம், ஆர்த்தி பிரபந்தம் உட்பட (பிள்ளை லோகாசாரியாரின்) ரகசிய கிரந்தகளுக்கும், அருளாள பெருமாள் எம்பெருமானாரின் ஞான மற்றும் ப்ரமேய சாரத்திற்கும், பெரியாழ்வார் திருமொழி (கரையான் அரித்துப் போன முதல் சில பாசுரங்கள் மட்டும்) இராமானுச நூற்றந்தாதி ஆகியவற்றின் விளக்கவுரை உட்பட பத்தொன்பது நூல்களை எழுதியுள்ளார்.

நூல்கள்

தொகு

வடமொழியில்

  • யதீந்திரப் பிரணவர் - ஆசிரியர் வழிபட்ட ‘உடையவர்’ மீது ‘யதிராஜ விம்சதி’ என்னும் தோத்திரம் பாடியதால் பெற்ற பெயர். இதனால் ஆசிரியர் தாம் வழிபட்ட உடையவர் சிலையையே இவருக்குக் கொடுத்துவிட்டார்.
  • பிள்ளை லோகாசாரியார் ரகசிய கிரந்தங்களுக்கு வியாக்கியானம்
  • ஈட்டுப் பிரமாணத் திரட்டு
  • கீதைக்குத் தாத்பர்ய தீபம்
  • ஆசாரிய ஹிருதய வியாக்கியாணம் – இறுதிக்காலப் படுக்கையில் இருந்தபோது.

தமிழில்

பிற பெயர்கள்

தொகு
  • பிள்ளை பெயர் – அழகிய மணவாளன்
  • அனந்தாழ்வார் வம்சம் இவர் என இவரை இவரது ஆசிரியர் மக்களுக்குக் காட்டினார்.
  • உபய வேதாந்தாசிரியர் – ஸ்ரீபெரும்புதூரில் நாலாயிர பிரபந்த விரிவுரை செய்து பெற்ற பெயர்.
  • கோவிந்தராசப்பன் – இவரை உடையவரின் அவதாரம் எனக் கருதி, திருவரங்கத்தார் சூட்டிய பெயர்.
  • ஜீயர், பெரிய ஜீயர், வரவரமுனி, ராமானுசன் பொன்னடி, ஸௌம்யோபந்தருமுநி, ஸௌம்யஜாமாத்ருமுநி, காந்தோபயந்த்ருமுநி, ரம்யஜாமாத்ருமுநி இத்யாதி.

தொடர்பு

தொகு
  • திருநாராயணபுரத்து ஆயி – திருக்குருகூரில் விரிவுரை செய்தபோது தோன்றிய இவரது ஐயத்தைப் போக்கியவர்.
  • திருவரங்க உத்தம நம்பி, சடகோபக் கொற்றி ஆகியோர் இவரை அனந்தாழ்வாராகவே கண்டனர்.

வடகலை தென்கலை

  • தேசிகர் வடகலைக்கு மூலவர்
  • மணவாள மாமுனிகள் தென்கலைக்கு மூலவர்.

ஆசிரியர் வாக்கு

தொகு
  • இவரது ஆசிரியர் திருமலையாழ்வார் திருநாட்டுக்கு எழுந்தருளும் காலம் நெருங்கியபோது அளித்த வாக்கு
சமஸ்கிருத சாஸ்திரத்தில் பலகால் கண் வையாதீர்.
ஸ்ரீ பாஷ்யத்தை உணர்ந்து
அதனைப் பிரவசனம் செய்துகொண்டு
திருவரங்கத்திலேயே நித்திய வாசம் பண்ணும்

என்பது.

சிறப்பு

தொகு
  • நாதமுனிகள் கொண்டு தொடங்கும் வைணவப் பெரியார்களின் பரம்பரையில் மணவாளமாமுனிகளே இறுதியாக கொள்ளப்படுகிறார்.
  • சுவாமி இராமானுசரின் மறுஅவதாரம் என்றே வைணவர்களால் போற்றப்படுகிற இவரின் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி ப்ரதிவாதிபயங்கரம் அண்ணாவால் இயற்றப்பட்டு இன்றளவும் தினமும் நடைதிறக்கும்போது பாடப்பட்டுவருகிறது.
  • எம்பெருமான் திருவடிகளே சரணம் [1]
  • ஜீயர் திருவடிகளே சரணம் [2]

மேற்கோள்கள்

தொகு
  1. இந்தத் தொடர் ஆர்த்திப் பிரபந்தம் 15-ஆம் பாடலின் முதல் அடியாக உள்ளது.
  2. ஜீயர் எனும் பெயர் இந்நூலாசிரியர் மணவாள மாமுனிகளைக் குறிக்கும். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலிலுள்ள பதிகங்கள் ஒவ்வொன்றும் முடிந்த பின்னர் இத்தொடர் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணவாளமாமுனி&oldid=3994678" இலிருந்து மீள்விக்கப்பட்டது