ஆர்னோல்டு சுவார்செனேகர்
அர்னால்டு சுவார்சுநேகர் ஒரு ஆத்திரிய-அமெரிக்கரும் முன்னாள் தொழில்முறை உடற்கட்டு கலைஞரும் ஆவார். இவர் விளம்பர வடிவழகரும், நடிகரும், திரைப்பட இயக்குநரும், தொழிலதிபரும், அரசியல்வாதியுமாவார். மேலும் இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 38ஆவது ஆளுநராக உள்ளார். அர்னால்டு தனது உடற்கலை பயிற்சியினை தனது 15ஆவது வயதிலிருந்தே செய்து வந்தார். இவர் முதல் முறையாக உலக ஆணழகன் பட்டத்தினை தனது 20ஆவது வயதில் வென்றார். மேலும் திரு.ஒலிம்பியா ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவரும் ஆவார். இவர் உடற்கட்டு கலையைப் பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு புகழின் உச்சிக்கே சென்றார். இவரை "ஆஸ்ட்ரியன் ஓக்" என அழைத்தனர்.
ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் | |
---|---|
38வது கலிஃவோர்னிய ஆளுனர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 17 2003 | |
Lieutenant | Cruz Bustamante (2003 - 2007) John Garamendi (2007 - Present) |
முன்னையவர் | கிரே டேவிஸ் |
பின்னவர் | பதவியில் உள்ளார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 30, 1947 தாள் பீய் கிரஸ் ஆஸ்திரியா |
அரசியல் கட்சி | ரிபப்லிகன் கட்சி |
உயரம் | 6 அ்டி 2 in / 188 cm |
துணைவர் | மரியா சிரிவர் |
தொழில் | மெய்வல்லுனர், நடிகர் |
ரிபப்ளிக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அர்னால்டு 2003 அக்டோபர் 7 இல் முதல் முறையாக ஆளுநராக வெற்றி பெற்றார்.
சொந்த வாழ்க்கை
தொகுஅர்னால்டும் இவரது மனைவி மரியா ஸ்ரிவர்-உம் 25 ஆண்டுகளாக இணை பிரியாத மணவாழ்க்கையில் உள்ளார்கள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசுவார்சுநேகர் ஆத்திரியாவில் உள்ள தாள் என்கிற சிறிய ஊரில் பிறந்தவர். சுவார்சுநேகர் ஆத்திரிய இராணுவத்தில் பணியாற்றி ஓராண்டு பணி நிறைவு செய்தவர். இவர் இராணுவத்தில் பணியாற்றிய பொழுது ஜூனியர்.திரு.ஐரோப்பா என்கிற ஆணழகன் பட்டதை வென்றவரும் ஆவார். அர்னால்டு உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக 1966 இல் இலண்டன் நகருக்குச் சென்றார். அப்பொழுது இவர் இரண்டாம் இடம் மட்டுமே பெற முடிந்தது. அப்போட்டியில் நடுவராக இருந்த சார்லஸ் பென்னெட் என்பவர் அர்னால்டின் திறமைகளை கண்டு வியந்து அவராகவே அர்னால்டிற்கு பயிற்சி அளிக்க முன்வந்தார். அதன் பின்னர் அர்னால்டின் வெற்றிகளின் வாயிலாக படிப்படியாக முன்னேறி உச்சத்தினை அடைந்தார்.
அர்னால்ட் நடித்த படங்களில் சில
தொகுடோட்டல் ரீகால், ட்ரூ லைஸ் பிரடேட்டர் டெர்மினேட்டர் 1, 2, 3 கமாண்டோ