அர்பைல் சிவராம் கெப்பர்

இந்திய அரசியல்வாதி

அர்பைல் சிவராம் கெப்பர் (Arbail Shivaram Hebbar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கருநாடக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கெப்பர் 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எல்லப்பூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு கர்நாடக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2019-ல் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார். பின்னர் 2019 திசம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]

அர்பைல் சிவராம் கெப்பர்
தொழிலாளர் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 பிப்ரவரி 2020
முன்னையவர்எஸ். சுரேஷ் குமார், பாரதிய ஜனதா கட்சி
சர்க்கரை துறை அமைச்சர்
பதவியில்
6 பிப்ரவரி 2020 – 21 ஜானுஅரி 2021
முன்னையவர்சி. டி. ரவி
பின்னவர்எம். டி. பி. நாகராஜ்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 மே 2018
தொகுதிஎல்லப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூன் 1956 (1956-06-04) (அகவை 68)c
ஆர்டிபைல், எல்லாபூர் தாலுகா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2019–முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
(2019 வரை)
பிள்ளைகள்விவேக் கெப்பர், சுருதி கெப்பர்
வேலைஅரசியல்வாசி
இணையத்தளம்[1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கெப்பர் இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் வடகன்னட மாவட்டத்தில் கங்காவதி ஆற்றின் கரையில் உள்ள சிவகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தார்.

அரசியல்

தொகு

1983ஆம் ஆண்டில், கெப்பர் எல்லப்பூர் மாநில வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பொது வாழ்க்கைக்கு இவரது முதல் நுழைவு ஆகும். 2008ஆம் ஆண்டு, எல்லப்பூர்-முண்ட்கோட் சட்டமன்றத் தேர்தலில் வி. எஸ். பாட்டீலுக்கு எதிராகக் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டார்; ஆனால் தோல்வியடைந்தார்.[5] 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கருநாடக சட்டமன்றத் தேர்தலில் எல்லப்பூர் தொகுதியில் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] மீண்டும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] காங்கிரசு சார்பில் வெற்றி பெற்ற இவர், பாஜக அரசிற்கு ஆதரவு வழங்கிய விவகாரத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எல்லப்ப்பூர் தொகுதிக்கு 2019ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இவர், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிப்ரவரி 6, 2020 முதல் கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சராகவும் உள்ளார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Shivaram Hebbar (2019). "Shree Shivaram Hebbar" 10 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archiveurl=, you must first specify |url=. https://shivaramhebbar.com/. பார்த்த நாள்: 10 May 2022. 
  2. "PRATAP GOUDA PATIL(Bharatiya Janata Party(BJP)):Constituency- Maski(RAICHUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  3. Madhuri (2018-05-15). "Karnataka MLA's List 2018: Full List of Winners From BJP, Congress, JDS and More". www.oneindia.com (in ஆங்கிலம்). Archived from the original on 15 May 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  4. "Rebel Karnataka MLAs barring Roshan Baig to join BJP after SC allows them to contest bypolls". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  5. "From lorry driver to minister, MLA Shivaram Hebbar has braved many odds" (in en). SahilOnline | Reflection of the Truth இம் மூலத்தில் இருந்து 8 மே 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200508092049/https://www.sahilonline.net/en/yallapur-mla-shivaram-hebbar-take-oaths-as-cabinet-minister-in-bangalore. 
  6. https://resultuniversity.com/election/yellapur-karnataka-assembly-constituency
  7. https://myneta.info/karnataka2018/candidate.php?candidate_id=5840
  8. https://indianexpress.com/article/india/yellapur-karnataka-assembly-by-election-bypolls-results-2019-counting-live-winner-runner-up-6156878/
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்பைல்_சிவராம்_கெப்பர்&oldid=4110581" இலிருந்து மீள்விக்கப்பட்டது