அர்மோகிந்தர் சிங் சாத்தா
அர்மோகிந்தர் சிங் சாத்தா (Harmohinder Singh Chatha) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அரியானா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் [1] [2] அரியானா அரசாங்கத்தில் நிதி, விவசாயம், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். [3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅர்மோகிந்தர் சிங் சாத்தா ஏப்ரல் 1, 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பலியா நகரத்தில் பிறந்தார். அரியானா மாநிலத்தின் கர்னல் நகரிலுள்ள தயால் சிங் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். [4]
தொழில்
தொகு1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதியன்று தான் இடம்பெற்றிருந்த சமூகத்தின் உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். இவருக்குப் பிறகு சவுத்ரி சரூப் சிங் மாநில அமைச்சராகப் பதவியேற்றார். [5] 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதியன்று அரியானா மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். [6] காங்கிரசு கட்சியின் உறுப்பினராக செயல்பட்ட இவர் மூன்று முறை சபாநாயகராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharma, Navneet (2009-10-28). "Chatha elected as Haryana Assembly Speaker for third time" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
- ↑ The Journal of Parliamentary Information (in ஆங்கிலம்). 2010.
- ↑ DARE/ICAR Annual Report (in ஆங்கிலம்). 2009.
- ↑ "Haryana Vidhan Sabha WHO'S WHO 1987" (PDF).
- ↑ Committees ... (a Review) (in ஆங்கிலம்). Haryana Vidhan Sabha Secretariat. 1972.
- ↑ The Journal of Parliamentary Information (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat. 2010.