அர்-ராத்
சூரா அர்-ராத் (Sūrat ar-Raʻd, அரபு மொழி: سورة الرعد, "இடி") என்பது திருக்குர்ஆன் உடைய 13ஆவது அத்தியாயம் (சூரா) ஆகும். இது 43 வசனங்களைப் பெற்றுள்ளது. இது முகத்தத் என்னும் திருக்குர்ஆன் உடைய முகப்பு எழுத்துக்களைக் கொண்டுள்ளது.[1] இந்த அத்தியாயமானது உண்மையின் சக்தி மற்றும் பொய்மையின் பலவீனம் ஆகியவற்றை விளக்குவதை முக்கிய நோக்கமாகக் கொன்டுள்ளது. இது 'இறைவன் ஒருவனே' என்னும் கொள்கை, இறைவனின் செய்தி, இறுதித் தீர்ப்பு நாள், தண்டனைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது. சக்தி மற்றும் நிலைப்புத்தன்மை, பலவீனம் தவறுகள்(எத்தகைய தன்மையுடன் வெளிப்படுத்தியிருந்தாலும் சரி) , மேலும் பொய்யான கவர்ச்சிகரமான மாயைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த அத்தியாயம் சுழல்கிறது.
நாம் பொய்மையினால் ஏற்படும் பொய்யான கவர்ச்சிகரமான மாயைகள் ஆகியவற்றால் ஏமாறக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. ஏனெனில் நீக்க முடியாத அளவுக்கு பொய்மையானது உலகம் முழுவதும் பிரகாசமான ஒளியுடன் பரவி இருக்கிறது.