அறநெறிப் பாடசாலை

அறநெறிப் பாடசாலை என்பது வாழ்க்கைக்கான நல்லறத்தைப் போதிக்கும் வகையிலான இந்துநெறி சார்ந்த அறவொழுக்கங்களைப் போதிக்கும் பாடசாலைகள் ஆகும்.

அறநெறிப்பாடசாலை மாணவர்கள் சீருடையில்

இலங்கையில் இந்து சமய, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ்ப்பதிவு செய்யப்பட்ட ஆலயங்கள் மற்றும் மத நிறுவனங்கள் இவற்றை நடத்தி வருகின்றன. கத்தோலிக்க மதத்தவர்களின் ஞாயிறு பாடசாலைகளுக்கு ஒப்பாகவும், பௌத்தர்களின் 'தகம் பாசல' க்கு சமமாகவும் இசுலாமியர்களின் மதரசாக்களுக்கு ஒப்பாகவும் இது கொள்ளப்படுகிறது. இப்பாடசாலை மாணவர்கள் இந்து ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவும் சமய சாதனங்களை மேற்கொள்ளவும் தூண்டப்படுகின்றார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறநெறிப்_பாடசாலை&oldid=1453910" இலிருந்து மீள்விக்கப்பட்டது