அறந்தாங்கிக் கோட்டை

அறந்தாங்கிக் கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரில் அமைந்துள்ளது. இக்கோட்டை 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் தொண்டைமான் வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.

அறந்தாங்கிக் கோட்டை
அறந்தாங்கிக் கோட்டை is located in தமிழ் நாடு
அறந்தாங்கிக் கோட்டை
தமிழ்நாட்டில் அமைவிடம்
அமைவிடம்அறந்தாங்கி, இந்தியா
கட்டப்பட்டது16 அல்லது 17 ஆம் நூற்றாண்டு
கட்டிடக்கலைஞர்தொண்டைமான்
கட்டிட முறைதிராவிடக் கட்டிடக்கலை

வரலாறு

தொகு

பாண்டியர் காலத்திலும், விசயநகரப் பேரரசுக்காலத்திலும், அவர்களுக்குக் கீழ்ப்பட்ட ஆட்சித் தலைவர்களாக அறந்தாங்கிப் பகுதியை ஆண்டுவந்தவர்கள் தொண்டைமான் வம்சத்தினர். அறந்தாங்கித் தொண்டைமான்கள் எனப்பட்ட இவர்கள் 15 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 18 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் 16 ஆம் நூற்றாண்டிலோ அல்லது 17 ஆம் நூற்றாண்டிலோ இந்தக் கோட்டை கட்டப்பட்டது.

அமைப்பு

தொகு

மண்ணால் கட்டப்பட்ட இக்கோட்டையுள் அரண்மனைகளோ அல்லது வேறு முக்கியமான கட்டிடங்களோ இருந்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறந்தாங்கிக்_கோட்டை&oldid=2060648" இலிருந்து மீள்விக்கப்பட்டது