அறிவியல் மாதிரியாக்கம்

அறிவியல் மாதிரியாக்கம் (Scientific modelling) என்பது ஓர் அறிவியல் செயல்பாடு ஆகும், இதன் நோக்கம், உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது அம்சத்தை எளிதாகப் புரிந்துகொள்வது, வரையறுப்பது, அளவிடுவது, காட்சிப்படுத்துவது அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய மற்றும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவைக் குறிப்பிடுவதன் மூலம் உருவகப்படுத்துவது ஆகும் . இதற்கு நிஜ உலகில் உள்ள சூழ்நிலையின் பொருத்தமான அம்சங்களைத் தேர்ந்தெடுத்து அடையாளம் காணப்படுதல் வேண்டும். பின்னர் வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு வகையான மாதிரிகளைப் பயன்படுத்த வேண்டும், அதாவது நன்கு புரிந்துகொள்வதற்காக பண்பியல் மாதிரிகள், செயல்படுவதற்காக செயல்பாட்டு மாதிரிகள், கணக்கிடுவதற்காக கணித மாதிரிகள், உருவகப்படுத்துவதற்காக வரைகலை மாதிரிகள் விடயத்தை காட்சிப்படுத்துவதற்காக வரைபட மாதிரிகள் பயன்படுத்துவது போன்றதாகும்.

மாதிரியாக்கம் என்பது பல அறிவியல் துறைகளின் இன்றியமையாத மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வகை மாதிரியாக்கம் பற்றி அதன் சொந்த கருத்துக்களைக் கொண்டுள்ளன. [1] [2]

சான்றுகள் தொகு

  1. Cartwright, Nancy. 1983. How the Laws of Physics Lie. Oxford University Press
  2. Hacking, Ian. 1983. Representing and Intervening. Introductory Topics in the Philosophy of Natural Science. Cambridge University Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_மாதிரியாக்கம்&oldid=3478194" இலிருந்து மீள்விக்கப்பட்டது