அறிவியல் வளர்ச்சிப் பிணையம்

அறிவியல் வளர்ச்சிப் பிணையம் அல்லது சயன்சு அண்டு டெவலப்மெண்ட்டு நெர்வொர்க்கு , (SciDev.Net, the Science and Development Network) என்பது ஓர் இலாபநோக்கற்ற அரசுசாரா நிறுவனம். இதன் குறிக்கோள் அறிவியல் தொழினுட்பம் சார்ந்த நம்பகத்தன்மை உடைய கருத்துகளை வளரும் நாடுகளில் அங்குள்ள ஆய்வாளர்கள், ஊடகவியாளர், கொள்கை உருவாக்குநர், பொதுமக்கள் குமுகத்தினர் ஆகியோருக்கு வழங்குவதாகும்[1].

அறிவியல் வளர்ச்சிப் பிணையச் சின்னம் (SciDev.Net logo)


இந்நிறுவனம் 2001 இல் நிறுவப்பட்டது[2]. இதற்கான காரணம் வளர்ந்த செல்வம் மிகுந்த நாடுகளுக்கும், வளர முற்படும் ஏழை நாடுகளுக்கும் இடையே பெருத்த அறிவியல் சார்ந்த அறிவு இடைவெளி இருந்தது. வளரும் நாடுகள் இந்த அறிவியல் செய்திகளால் அதிகம் பயன்பெறத் தேவை உடையவர்கள், ஆனால் அறிவுச்செய்திகளை அறிவதில் பெரும் இடைவெளி இருந்தது.[3]" இந்நிறுவனம் (சயிடெவ்.நெட், SciDev.Net) இக்குறைபாட்டை நீக்க இலவசமாக அணுக வாய்ப்புகள் நல்குகின்றது, பட்டறைகள் நடத்துகின்றது[4].

சீனா பரணிடப்பட்டது 2012-02-21 at the வந்தவழி இயந்திரம்
இலத்தின அமெரிக்கா, கரிபியன் பரணிடப்பட்டது 2012-02-23 at the வந்தவழி இயந்திரம்
நடுகிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா பரணிடப்பட்டது 2012-01-26 at the வந்தவழி இயந்திரம்
இந்தியத் துணைக்கண்டம் பரணிடப்பட்டது 2012-02-21 at the வந்தவழி இயந்திரம்
தென்கிழக்கு ஆசியா பரணிடப்பட்டது 2012-03-02 at the வந்தவழி இயந்திரம்
சகாராவுக்குத் தெற்கான ஆப்பிரிக்கா பரணிடப்பட்டது 2012-02-28 at the வந்தவழி இயந்திரம்

ஆதரவாளர், கொடை நல்குவோர், பங்குபற்றுநர்

தொகு

அறிவியல் வளர்ச்சிப் பிணையத்துக்கு பணம் தந்து உதவுபவர்களில் (கொடை நல்குவோரில்) கீழ்க்காண்பவர்கள் உண்டு[5]:

  • ஐக்கிய இராச்சிய அனைத்துலக வளர்ச்சித் துறை (DFID)[6]
  • சுவீடிய அனைத்துலக வளர்ச்சி நிறுவனம் (SIDA) [7]
  • வெளியுறவுக்கான இடச்சு அமைச்சகம் (DGIS)[8]
  • வளர்ச்சிக்கும் ஆய்வுக்குமான பன்னாட்டு நடுவம் (IDRC) [9]

பங்காளர்கள் அறிவியல் வளர்ச்சிப் பிணையம் (SciDev.Net) பற்பல உலகளாவிய,நிலப்பிரிவுசார்ந்த, நாடளாவிய நிறுவனங்களுடன் ஒத்த குறிக்கோளுடன் கூட்டுழைக்கின்றது. அவற்றுள் சில:

அறிவியல் வளர்ச்சிப் பிணையம் (சயிடெவ்.நெட், SciDev.Net) இத்தாலியில், திரீசிட்டியில் (Treiste) இருந்து இயங்கும் வளரும் நாடுகளுக்கான வளர்ச்சிக்கான அறிவியல் உயர்கல்விமன்றம் (TWAS, the Academy of Sciences for the Developing World) என்பதோடும் தொடர்புடையது.[10]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. SciDev.Net. About Us. http://web.scidev.net/en/content/overview/#top பரணிடப்பட்டது 2012-03-13 at the வந்தவழி இயந்திரம்.
  2. SciDev.Net. எங்களைப் பற்றி: வரலாறு. http://www.scidev.net/en/content/overview/#X5B0565251B789BBB2EE337ECB2E443A4 பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம்
  3. IDRC (The International Development Research Centre). Archive: Science and Development Network. http://www.idrc.ca/en/ev-29488-201-1-DO_TOPIC.html பரணிடப்பட்டது 2011-06-08 at the வந்தவழி இயந்திரம்
  4. ஏற்புபெற்ற வலைத்தளம்
  5. About Us – supporters/funders http://www.scidev.net/en/content/supporters/
  6. DFID (Department for International Development). Project Record: Science in Development website (SciDev.Net). Research for Development. http://www.research4development.info/ProjectsAndProgrammes.asp?ProjectID=3937
  7. Swedish International Development Cooperation Agency (SIDA). http://www.sida.se/English/
  8. Dutch Ministry of Foreign Affairs. Science and Development Network (SciDev.Net). http://www.minbuza.nl/nl/Onderwerpen/Kennis_en_armoedebestrijding/Onderzoek/Programma_onderzoek_en_innovatie[தொடர்பிழந்த இணைப்பு]
  9. International Development Research Centre (IDRC). http://www.idrc.ca/en/ev-1-201-1-DO_TOPIC.html பரணிடப்பட்டது 2010-12-06 at the வந்தவழி இயந்திரம்
  10. www.twas.org

வெளியிணைப்புகள்

தொகு