அறுநைட்ரேட்டோ அலுமினேட்டு

அறுநைட்ரேட்டோ அலுமினேட்டு (Hexanitratoaluminate) என்பது [Al(NO3)6]3− என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஓர் எதிர்மின் அயனியாகும். அலுமினியமும் ஆறு நைட்ரேட்டு தொகுதிகளும் சேர்ந்து இந்த எதிர்மின் அயனி உருவாகிறது. இந்த அயனிகளே அறுநைட்ரேட்டோ அலுமினேட்டு உப்புகளாக உருவாகின்றன. எக்சாநைட்ரேட்டோ அலுமினேட்டு என்ற பெயராலும் இந்த அயனி அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய சேர்மங்கள் தொகு

எக்சாபெர்குளோரேட்டோ அலுமினேட்டு [Al(ClO4)6]3−[1] அயனியில் பெர்குளோரேட்டு தொகுதிகள் நைட்ரேட்டுக்குப் பதிலாக உள்ளன. நைட்ரேட்டுகளைப் போலவே இவையும் தண்ணீருடன் உடனடியான வினைகளை வெளிப்படுத்துகின்றன. பெண்டாநைட்ரேட்டோ அலுமினேட்டுகளில் ஐந்து நைட்ரேட்டு தொகுதிகளும் [2], டெட்ராநைட்ரேட்டோ அலுமினேட்டுகளில் நான்கு நைட்ரேட்டு தொகுதிகளும் உள்ளன[3].

உதாரணங்கள் தொகு

பொட்டாசியம் எக்சாநைட்ரேட்டோ அலுமினேட்டு ஒரு அறியப்பட்ட சேர்மமாகும்.- K3[Al(NO3)6]. டெட்ராமெத்திலமோனியம் எக்சாநைட்ரேட்டோ அலுமினேட்டை உருவாக்க முடியும். டெட்ராமெத்திலமோனியம் குளோரைடு, அலுமினியம் குளோரைடு, டைநைட்ரசன் டெட்ராக்சைடு, நைட்ரோமீத்தேன் ஆகியனவற்ரைக் கொண்டு இதைத் தயாரிக்கலாம்[4].

ருபீடியம் எக்சாநைட்ரேட்டோ அலுமினேட்டும் கிடைக்கப்பெறுகிறது[5].

மேற்கோள்கள் தொகு

  1. Nikitina, Z. K.; V. Ya. Rosolovskii (1978). "Ammonium perchloratoaluminates". Bulletin of the Academy of Sciences of the USSR Division of Chemical Science 27 (3): 449–452. doi:10.1007/BF00923912. பன்னாட்டுத் தர தொடர் எண்:0568-5230. 
  2. D'yachenko, O. A.; L. O. Atovmyan (1975). "The molecular and crystal structure of cesium pentanitratoaluminate". Journal of Structural Chemistry 16 (1): 73–78. doi:10.1007/BF00747552. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4766. 
  3. Addison, C. C.; P. M. Boorman; N. Logan (1966). "Anhydrous aluminium nitrate, and the nitronium and alkylammonium tetranitratoaluminates". Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 1434. doi:10.1039/J19660001434. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4944. 
  4. Jones, CJ Bigler (2007). Transition and Main Group Metals Applied to Oxidative Functionalization of Methane and Use as High Oxygen Carriers for Rocket Propellants. ProQuest. பக். 164–165,174–175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780549231066. https://books.google.com/books?id=ELjafGhBa3EC&pg=PA164. பார்த்த நாள்: 4 February 2014. 
  5. G. N. Shirokova, S. Ya. Zhuk, V. Ya. Rosolovskii (1976). "Rubidium hexanitratoaluminate". Russian Journal of Inorganic Chemistry 21: 1459.