அலகுப் பின்னம்
அலகுப் பின்னம் (Unit Fraction) என்பது தொகுதி எண்ணாக ஒன்றையும் பகுதி எண்ணாக நேர் நிறையெண்ணையும் கொண்ட, பின்னமாக எழுதப்பட்ட விகிதமுறு எண்ணாகும்.[1] ஓர் அலகுப் பின்னமானது நேர் நிறையெண்ணொன்றின் பெருக்கல் நேர்மாறாக அமையும்.
அலகுப் பின்னங்களுக்கான எடுத்துக்காட்டுகளாக , , , போன்றவற்றைக் கூற முடியும்.
தொடக்க எண் கணிதம்
தொகுஇரண்டு அலகுப் பின்னங்களைப் பெருக்கினால் இன்னொரு அலகுப் பின்னமே கிடைக்கும்.
ஆனால், இரண்டு அலகுப் பின்னங்களைக் கூட்டினாலோ கழித்தாலோ வகுத்தாலோ பொதுவாக அலகுப் பின்னமல்லாத பெறுமானமே கிடைக்கும்.
அலகுப் பின்னங்களின் முடிவுள்ள கூட்டல்
தொகுஎந்தவொரு நேர் விகிதமுறு எண்ணையும் அலகுப் பின்னங்களின் கூட்டுத்தொகையாகப் பல்வேறு வழிகளில் எழுத முடியும். எடுத்துக்காட்டாக,
அடுத்துள்ள பின்னங்கள்
தொகுஇரண்டு பின்னங்களுக்கிடையிலான வேறுபாடு ஓர் அலகுப் பின்னத்திற்குச் சமனாக இருப்பின் அவ்விரு பின்னங்களும் அடுத்துள்ள பின்னங்கள் என அழைக்கப்படும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ["பின்னங்கள் (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-07-04. பார்க்கப்பட்ட நாள் 2012-05-08. பின்னங்கள் (ஆங்கில மொழியில்)]
- ↑ அடுத்துள்ள பின்னம் (ஆங்கில மொழியில்)