அலம்படி (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

அலம்பாடி (Alambadi Azmi)[3] என்பவா் இந்திய அரசியல்வாதியும் உத்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்திரப்பிரதேச மாநிலம் நிசாமாபாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 18ஆவது உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] இவா் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் 17ஆவது உத்திரப் பிரதேச சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.[4]

அலம்படி
சட்டமன்ற உறுப்பினர்-நிசாம்பாத்து (உ.பி.)
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச்சு 2012
முன்னையவர்ஆண்காட் யாதவ்
பதவியில்
அக்டோபர் 1996 – மே 2007
முன்னையவர்ஆண்காட் யாதவ்
பின்னவர்ஆண்காட் யாதவ்
தொகுதிநிசாம்பாத்து, ஆசம்கர் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அலம்பாடி அசுமி

16 மார்ச்சு 1936 (1936-03-16) (அகவை 88)[1]
விந்தாவல், ஆசம்கர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்குத்சியா கான்
பிள்ளைகள்6
வாழிடம்(s)குர்மி தோழா, ஆசம்கர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
கல்விமின்னியல் & எந்திரவியல் பட்டயப்படிப்பு
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி, பொறியியலாளர்[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அலம்பாடி, 1936ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, வடிவஜ்மா ஆஸ்மிக்கு ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள விண்டவால் என்ற இடத்தில் மகனாகப் பிறந்தார். இடைநிலை வரை படித்து மின்னியல் & எந்திரவியல் பட்டயப்படிப்பினை முடித்துள்ளார். இவர் தொழிலில் பொறியாளர் ஆவார். அலப்படி குடாசியா கானை மணந்தார். இந்த இணையருக்கு ஆறு மகன்கள் உள்ளனர்.[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

1996 முதல், அலம்பாடி நிஜாமாபாத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் உத்தரபிரதேசத்தின் 13, 14, 16, 17, 18ஆவது என ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் ஆவார்.[2]

2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், அலம்பாடி பாரதிய ஜனதா கட்சியின் மனோஜை 34,187 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, நிஜாமாபாத் தொகுதியில் தனது பதவியினைத் தொடர்ந்தார்.[4][5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Member Profile". official website of Legislative Assembly of Uttar Pradesh. Archived from the original on 12 June 2021. பார்க்கப்பட்ட நாள் 10 December 2018.
  2. 2.0 2.1 "Candidate affidavit". http://myneta.info/uttarpradesh2017/candidate.php?candidate_id=4484. 
  3. "Yogi 2.0 cabinet is younger than its predecessor, average age has dipped from 55 to 53 years". ThePrint. 27 March 2022. https://theprint.in/politics/yogi-2-0-cabinet-is-younger-than-its-predecessor-average-age-has-dipped-from-55-to-53-years/890803/. 
  4. 4.0 4.1 4.2 "Nizamabad Election Result 2022 LIVE Updates: Alam Badi of SP Wins" (in en). News18. 10 March 2022. https://www.news18.com/news/politics/nizamabad-election-result-2022-live-updates-winner-loser-leading-trailing-mla-margin-4852346.html. 
  5. "Uttar Pradesh-Nizamabad". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 10 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலம்படி_(அரசியல்வாதி)&oldid=4084567" இலிருந்து மீள்விக்கப்பட்டது