அலர்நாத மந்திர்
அலர்நாதர் கோயில் அல்லது ஆழ்வார் நாதா (Alarnatha Temple or Alvarnaatha) என்பது விஷ்ணுவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். இது ஒடிசாவின் புரி அருகிலுள்ள பிரம்மகிரியில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தின் கிருஷ்ணபட்சத்தின் போது, தீர்த்தமாடலுக்குப் பிறகு, ஜெகந்நாதரை புரி கோவிலில் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படாதபோது, இங்கே கூட்டம் கூடுகிறது. பிரபலமாக 'அனாசாரம்' அல்லது 'அனவாசாரம்' (அதாவது புரியின் இறைவனைக் காண வாய்ப்பில்லை என்று அர்த்தம்) என அழைக்கப்படும் இந்த காலகட்டத்தில் ஜெகந்நாதர் பிரம்மகிரியின் அலர்நாத் கோயிலில் அலர்நாத் தேவராக காட்சியளிக்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இது புரியிலிருந்து சுமார் 23 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
வரலாற்றுச் சான்றுகள்
தொகுஇராமானுசர் ஒடிசாவிற்கு வருகை புரிந்ததோடு இந்தக் கோயில் தொடர்புடையது.[1] சைதன்யர் புரியில் தங்கியிருந்த காலத்தில் ஜெகந்நாதரின் திருவுருவத்தை தினமும் பார்ப்பது வழக்கம். அவருடன் இருக்கும் தெய்வங்களையும் 15 நாட்கள் ரகசிய அறைக்கு வைத்திருக்கும்போது, அவரால் கடவுளைக் காண முடியவில்லை. எனவே புராணத்தின் படி, கடவுள் அவரை பிரம்மகிரிக்கு சென்று அலர்நாத் கோயிலுக்குச் செல்லும்படி கட்டளையிட்டார். சைதன்யர் சம்கீர்த்தனை செய்த சிலை இன்றும் உள்ளது. ஒருமுறை ஆழ்வார்கள் இத்தலத்திற்கு வருகை தந்ததாக பல வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இது பற்றி எந்த குறிப்பும் இல்லை.
கோயில் நேரங்கள்
தொகுகோயில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9:30 மணிக்கு மூடப்படும். பால் போகா (காலை உணவு) காலையில் வழங்கப்படுகிறது. மதியம், பல்வேறு வகையான சாதம், பருப்பு மற்றும் காய்கறி கறிகள், கீரி (அரிசி புட்டு) என்ற இனிப்புடன் வழங்கப்படுகின்றன. இரவில் வாழைப்பழ பொரியலுடன் விதவிதமான பித்தம் மற்றும் கிச்சடி வழங்கப்படுகிறது. அனவாசர காலத்தில் ஆழ்வார்நாத சுவாமிக்கு வழங்கப்படும் கீரி போகா அனைவரும் விரும்பி வாங்கும் பிரசாதமாகும்.
சான்றுகள்
தொகு- ↑ K.K. Kusuman (1990). A Panorama of Indian Culture: Professor A. Sreedhara Menon Felicitation Volume. Mittal Publications. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-214-1.