அலிசர் சுலேமெனோவு

கசக்கசுத்தான் நாட்டு சதுரங்க வீரர்

அலிசர் சுலேமெனோவு (Alisher Suleymenov) கசக்கசுத்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] 2019 ஆம் ஆதம் பாவ்சிற்கு பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தை பிடே அமைப்பு இவருக்கு வழங்கியது.[2] 2023 ஆம் ஆகத்து மாதத்தில் இவருடைய எலோ புள்ளிகள் கணக்கு 2509 என்ற உச்ச அளவில் இருந்தது.

அலிசர் சுலேமெனோவு
Alisher Suleymenov
நாடுகசக்கசுத்தான்
பிறப்பு5 ஆகத்து 2000 (2000-08-05) (அகவை 23)
பட்டம்பன்னாட்டு மாசுட்டர் (2019)
பிடே தரவுகோள்2420 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2509 (ஆகத்து 2023)

சதுரங்க வாழ்க்கை தொகு

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சூடின் நினைவு சதுரங்கப் போட்டியில் கூட்டாக முதலிடத்தைப் பிடித்தார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மாசுக்கோ அணி வெற்றியாளர் போட்டியில் இவர் பங்கேற்ற அணி வெற்றி கண்டது. இதே ஆண்டில் நடைபெற்ற அல்மேட்டி இணையவழி சதுரங்கத் திருவிழா போட்டியிலும் சுலேமெனோவு வெற்றி பெற்றார். இரிகா தொழில்நுட்பப் பல்கலைக்கழக திறந்தநிலை சதுரங்கப் போட்டியையும் கசகசுத்தான் நாட்டு 20 வயதுக்கு உட்பட்டோர் போட்டியையும் வென்றார்.[3]

2022 பாராசின் திறந்த நிலை 'ஏ' சதுரங்க போட்டியில் ர. பிரக்ஞானந்தா மற்றும் அலெக்சாண்டர் பிரெட்கே ஆகியோருக்குப் பின் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[4]

உருசிய ஆங்கில மொழிகளை பேசத் தெரிந்த அலிசர் சுலேமெனோவு சதுரங்க பயிற்சியாளராகவும் இயங்குகிறார்.[3]

2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரத்தில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். அங்கு இவர் கார்லோசு டேனியல் அல்போர்னோசு கப்ரேராவினால் முதல் சுற்றில் தோற்கடிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. https://ratings.fide.com/apps/241267.PDF
  2. "Suleymenov, Alisher". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-04.
  3. 3.0 3.1 "IM Alisher Suleymenov coaches chess students". lichess.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-07-27. பார்க்கப்பட்ட நாள் 2023-08-04.
  4. "R Praggnanandhaa wins Paracin Open title". The Times of India. 2022-07-16. பார்க்கப்பட்ட நாள் 2023-08-04.
  5. "Carlsen, Magnus vs. Pantsulaia, Levan - FIDE World Cup 2023". chess24.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-04.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிசர்_சுலேமெனோவு&oldid=3861917" இலிருந்து மீள்விக்கப்பட்டது