அலினா பிவோல்
உருசிய சதுரங்க வீராங்கனை
அலினா பிவோல் (Alina Bivol) உருசியாவைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனையாவார்.
அலினா பிவோல் Alina Bivol | |
---|---|
2021 உருசிய வெற்றியாளர் இறுதிப் போட்டியில் பிவோல் | |
நாடு | உருசியா |
பிறப்பு | சனவரி 19, 1996 திமித்ரோவ், உருசியா |
பட்டம் | பன்னாட்டு மாசுட்டர் (2021) கிராண்டு மாசுட்டர் (2017) |
பிடே தரவுகோள் | 2368 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2403 (செப்டம்பர் 2018) |
பிவோலுக்கு 2013 ஆம் ஆண்டு பிவோலுக்கு பன்னாட்டு மாசுட்டர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு உருசிய நகரமான கிம்ரியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 10 ஆட்டங்களில் 6 புள்ளிகள் எடுத்தார். கோசுட்ரோமா நகரத்தில் நடைபெற்ற போட்டியில் 4.5/9 என்ற புள்ளிகளும் 2012 ஆம் ஆண்டு சிகோரின் நினைவு சதுரங்கப் போட்டியில் 5/9 என்ற புள்ளிகளும் ஈட்டினார்.[1][2]
2015 ஆம் ஆண்டில், இவர் உருசியாவின் 21 வயதுக்குட்பட்டோர் பெண்கள் போட்டியில் வென்றார். உலக இளையோர் சதுரங்கப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் நடாலியா புக்சாவை விட அரை புள்ளி பின்தங்கியிருந்தார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Administrator. "FIDE Title Applications (GM, IM, WGM, WIM, IA, FA, IO)". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
- ↑ "M.Chigorin Memorial 2012: Areschenko and Socko stand apart" (in அமெரிக்க ஆங்கிலம்). 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
- ↑ "Российская Шахматная Федерация - Новости". ruchess.ru. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
- ↑ "Antipov and Buksa are 2015 World Junior Champions | Chessdom". www.chessdom.com. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.