அலிஸ் இன் வொண்டர்லேண்ட் (2010 திரைப்படம்)
அலிஸ் இன் வொண்டர்லேண்ட் (Alice in Wonderland) திரைப்படம் லிண்டா வூல்டர்னின் திரைக்கதையில் டிம் பர்டனின் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இருண்ட கற்பனை சாகச திரைப்படமாகும். இந்த படத்தில் ஜானி டெப், அன்னே ஹாத்வே, ஹெலினா போன்ஹோம் கார்டர், கிறிஸ்பின் குளோவர், மாட் லூகாஸ் மற்றும் மியா வாசிகோவ்ஸ்கா ஆகியோர் நடித்துள்ளனர். லூயிஸ் கரோலின்யின் கற்பனை புதினங்களாகிய அலிஸின் அட்வென்ச்சர்ஸ் இன் வொண்டர்லேண்ட் மற்றும் த்ரூ தி லுக்கிங் கிளாஸ் மற்றும் அதே பெயரில் 1951 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னியின் திரைப்படம் தழுவி எடுக்கப்பட்டது.
அலிஸ் இன் வோண்டர்லேண்ட் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | டிம் பர்டன் |
மூலக்கதை | அலிஸ் இன் அட்வென்ச்சர்ஸ் மற்றும் த்ரூ தி லுக்கிங் கிளாஸ் |
திரைக்கதை | லிண்டா வூல்டர்ன் |
இசை | டேனி எல்ப்மேன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | டரியூஸ் வோல்ஸ்கி |
படத்தொகுப்பு | கிறிஸ் லீபர்சன் |
கலையகம் |
|
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 25 பெப்ரவரி 2010 |
ஓட்டம் | 108 minutes |
நாடு | ஐக்கிய அமெரிக்கா[1] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | 150 டாலர்கள் |
மொத்த வருவாய் | $1.025 பில்லியன் |
இப்படத்தை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்து ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் படமாக்கியது. இத் திரைப்படம் 2010 ஆம் ஆண்டில் பிப்ரவரி 25 இல் இலண்டனில் ஓடியான் லீசெஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 2010 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று வெளியிடப்பட்டது. மறுநாள் ஐக்கிய இராச்சியத்திலும், ஐக்கிய அமெரிக்காவிலும் டிஸ்னி டிஜிட்டல் 3டி, ரியல் டி 3டி மற்றும் ஐமாக்ஸ் 3டி வடிவங்களில் வழக்கமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இத் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த அதிக வசூல் செய்த திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
அலிஸ் இன் வொண்டர்லேண்ட் வெளியீட்டில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத் திரைப்படம் 63வது கோல்டன் விருதுகளில் மூன்று பரிந்துரைகளை பெற்றது. 83 வது அகாடமி விருதுகளில் சிறந்த கலை இயக்கம் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றது மேலும் சிறந்த காட்சி பாணிக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது.[2] 2016 ஆம் ஆண்டு மே 27 இல் வெளிவந்த அலிஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ் எனும் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுது மற்றும் வசூலில் குறைவாக இருந்தது.
கதைச் சுருக்கம்
தொகு1871 ஆம் ஆண்டில், ஒரு விசித்திரமான தொடர்ச்சியான கனவால் கலங்கும் , 19 வயதான அலிஸ் கிங்ஸ்லீ, லார்ட் அஸ்காட்டின் தோட்டத்தில் விருந்தொன்றில் கலந்துகொள்கிறார். அங்கு, லார்ட் அஸ்காட்டின் மகன் ஹமிஷின் திருமண முன்மொழிவை எதிர்கொள்ள தெரியாமல் அங்கு தற்செயலாக தென்படும் நீல நிற இடுப்புச்சட்டை அணிந்து கடிகாரம் ஏந்திய முயலைப் பின்தொடர்ந்து ஒரு மரத்தின் அடியில் ஒரு பெரிய துளைக்குள் விழுகிறாள். விழுந்த இடத்தில் ‘குடிக்கவும்’ என்று பெயரிடப்பட்ட ஒரு போத்தலில் உள்ள திரவத்தை குடித்து விட்டு சிறிய கதவின் வழியாக மாயாஜால காட்டினுள் நுழைகிறாள்.
மாயாஜால காட்டினுள் வெள்ளை முயல், எலி, டோடோ பறவை, பேசும் பூக்கள், ட்வீட்லீடி மற்றும் ட்வீட்லெம் எனும் இரட்டையர்கள் என அவளை அறிந்தவர்களால் வரவேற்கப்படுகின்றாள். கம்பளிப்பூச்சியின் ஆராகுலம் இனால் (வொண்டர்லேண்டின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் சொல்லும் ஒரு சுருள் போன்ற நாட்காட்டி) முன்னறிவித்த அலிஸ் என்று உறுதிப்படுத்தப்படுகிறாள். சிவப்பு இராணியால் கட்டுப்படுத்தப்பட்ட வெள்ளை இராணியை அரியணைக்கு மீட்டெடுக்கவும், அண்டர்லேண்டில் வசிப்பவர்களை பயமுறுத்தும் டிராகன் போன்ற உயிரினமான ஜாபர்வாக்கியை கொல்ல வேண்டுமெனவும் கம்பளி பூச்சியினால் அறிவுறுத்தப்படுகிறாள்.
அலிஸ் விந்தை உலகில் பல விந்தையான உயிரினங்களையும், மேட் ஹேட்டரை சந்திக்கிறாள். மேட் ஹேட்டரின் முழு கிராமமும், குடும்பமும் சிவப்பு இராணியால் அழிக்கப்பட்டதால் மேட் ஹேட்டர் அலிஸிற்கு உதவுகிறார். மேட் ஹேட்டர் மற்றும் விந்தை உலகின் உயிரினங்களின் உதவியுடன் ஜாபர்வாக்கியை கொன்று, சிவப்பு இராணியை வென்று வெள்ளை இராணிக்கு (சிவப்பு இராணியின் தங்கை) அரியணைக்கு மீட்டு கொடுத்து விட்டு உலகிற்கு எவ்வாறு திரும்புகிறார் என்பதுமே திரைப்படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
தொகு- மியா வாசிகோவ்ஸ்கா - அலிஸ்
- ஜானி டெப்[3] மேட் ஹேட்டர்
- ஹெலனா பொன்ஹாம் கார்டர் - சிவப்பு இராணி
- அன்னா ஹாத்வே - வெள்ளை இராணி
- கிறிஸ்பின் குளோவர்[3] - நீவ் ஒப் ஹார்ட்ஸ்
- மட் லுகாஸ் - டிவிட்லிடி, ட்விட்லிடம் இரட்டையர்கள்
- பிரான்சிஸ் டி லா டார்[4] - அலிஸின் அத்தை
- லியோ பில்[4] - ஹமீஸ் அஸ்கொட்
- மார்டன் சொகஸ் - அலிஸின் தந்தை
- லின்ட்சி டுன்கன் - அலிஸின் தாய்
குரல் பதிவுகள்
தொகுஇசை
தொகுஇத் திரைப்படத்திற்கான டேனி எல்ப்மேனின் ஒலிப்பதிவு 2 மார்ச் 2010 இல் வெளியிடப்பட்டது.[5] இந்த இசை தொகுப்பு பில்போர்ட் டாப் 200 இசைத் தொகுப்புகளில் 89 வது இடத்தை பிடித்தது.[6]
ஆல் மோஸ்ட் அலிஸ் எனும் இசைத் தொகுப்பும் 2 மார்ச் 2010 இல் வெளியிடப்பட்டது. இது அலிஸின் இன் வொண்டர்லேண்ட் படத்தால் ஈர்க்கப்பட்ட பல்வேறு கலைஞர்களின் இசைத் தொகுப்பாகும்.[5][7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alice in Wonderland (2010)". British Film Institute. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
- ↑ Corliss, Richard ((May 13, 2012)). "The Avengers Storms the Billion Dollar Club — In Just 19 DaysP".
{{cite web}}
: Check date values in:|date=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 3.0 3.1 3.2 3.3 "Movie News, Reviews & DVD Releases | JoBlo.com". www.joblo.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
- ↑ 4.0 4.1 "Louisville Mojo: "Alice in Wonderland's" Queen Trumps the Mad Hatter". web.archive.org. 2010-03-12. Archived from the original on 2010-03-12. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ 5.0 5.1 "Earth Times: show/buena-vista-records-presents-almost-alice-featuring-other-voices-from-wonderland,1117270.shtml". www.earthtimes.org. Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
- ↑ Grein, Paul ((March 10, 2010)). "Week Ending March 7, 2010: Cruz Controls Hot 100". Archived from the original on 22 மார்ச் 2010.
{{cite web}}
: Check date values in:|date=
and|archive-date=
(help) - ↑ "News - Entertainment, Music, Movies, Celebrity". MTV News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
- ↑ Alice_In_Wonderland_Soundtrack-62 "Alice in Wonderland (2010 film) - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.