அலி முகம்மது நாயக்கு
அலி முகம்மது நாயக்கு (Ali Muhammad Naik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய நாடாளுமன்றத்தில் இவர் உறுப்பினராக இருந்தார். குலாம் முகமது சாவுடன் கூட்டணி வைத்து பரூக் அப்துல்லாவைத் தோற்கடித்து அவரது அரசாங்கத்தில் முதலிடத்தைப் பிடித்த சட்டமியற்றுபவர்கள் பலரில் அலி முகம்மது நாயக்கும் ஒருவராவார். குலாம் முகம்து சா இவரை வருவாய்த்துறை அமைச்சராக்கினார். 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாயக் மற்றும் கிட்டத்தட்ட அனைவரும் தேசிய மாநாட்டிற்குத் திரும்பி, போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [1] மாநிலங்களவையின் சபாநாயகராகவும் இவர் பணியாற்றினார். அனந்த்நாக் தொகுதியில் இருந்து முப்தி முகமது சையதை தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். சம்மு & காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2006 ஆம் ஆண்டில் டிரால் பேருந்து நிலையம் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இவர் உயிர் தப்பினார். [2] 2017 ஆம் ஆண்டில் அலி முகமது நாயக்கு காலமானார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "NC pays tributes to Ali Mohammad Naik". April 22, 2017.
- ↑ "FORMER SPEAKER HURT IN ATTACK". March 13, 2015.
- ↑ "Governor, CM condole demise of Ali Muhammad Naik". April 23, 2017.