அலி ஷேர் கல்ஜி

வங்காளத்தின் ஆளுநர்

அலிஷேர் பின் இவாசு கல்ஜி (Alī Sher bin ʿIwaz Khaljī ) (ஆட்சி; 1221) வடமேற்கு வங்காளத்தின் ( பிர்பூம் ) முன்னாள் ஆளுநராக இருந்தவர். வங்காளத்தின் கல்ஜி வம்சத்தைச் சேர்ந்த இவர் தனது தந்தை சுல்தான் இவாஸ் ஷாவின் கீழ் பணியாற்றினார். வங்காளத்தின் முஸ்லிம் ஆட்சியாளரைக் குறிப்பிடும் ஆரம்பகால கல்வெட்டில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலி ஷேர் கல்ஜி
வடமேற்கு வங்காளத்தின் ( பிர்பூம் ) ஆளுநர்
பதவியில்
1221-1227
ஆட்சியாளர்இவாஸ் கல்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1180
இறப்புஅண். 1227
பிள்ளைகள்பால்கா கல்ஜி
பெற்றோர்
உறவினர்கல்ஜி வம்சம்
சுய தரவுகள்
சமயம்இசுலாம்
சமயப் பிரிவுசுன்னி இசுலாம்
Jurisprudenceசுன்னி இசுலாம் பள்ளி

சுயசரிதை

தொகு

கல்ஜியின் தாத்தா உசைன் கல்ஜி கர்ம்சீர் பகுதியைச் சேர்ந்தவர். குடும்பம் சுன்னி இசுலாம் கலஜ் பழங்குடியைச் சேர்ந்தது. [1] [2] [3] துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த பழங்குடியினரான இவர்கள், துர்கெஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த பின்னர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானித்தானில் வசித்து வந்தனர். [4] [5] [6] கல்ஜி, வங்காளத்தில் லக்னௌதியை முஸ்லிம்கள் கைப்பற்றும்போது அப்போரில் பங்கு கொண்ட முகமது பக்தியார் கல்ஜியின் தளபதி இவாஸ் கல்ஜியின் மகனும் மற்றும் வாரிசுமாவார். இவரது தந்தை தில்லி சுல்தானகத்தின் கீழ் வங்காளத்தின் ஆளுநராக இரண்டு முறை பணியாற்றியுள்ளார். பின்னர், சுல்தானாகவும் சுதந்திரமாக ஆட்சி செய்தார். [7]

இவரது தந்தையால் வடமேற்கு வங்காளத்தின் ஆளுநராக கல்ஜி நியமிக்கப்பட்டார், [8] இது பிர்பூம் மற்றும் அண்டை பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசமாகும். [9] இவரது ஆட்சிக் காலத்தில் சூரி சதார் என்ற இடத்தில் இசுலாமிய நாட்காட்டி 618 (ஆகஸ்ட் 1221) இல் மரகேவைச் சேர்ந்த இபின் முகமது என்பவரால் ஒரு மதவழிபாட்டுக் கட்டடம் கட்டப்பட்டது. [10] இதில் இப்போது முஸ்லிம் மத போதகர் மக்தூம் ஷாவின் சமாதி உள்ளது. இந்திய கல்வெட்டுவியலாளர் சியாவுதீன் அப்துல் அய் தேசாய், கல்ஜி ஒரு ஆளுநர் மட்டுமல்ல, உண்மையில் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி செய்த ஒரு சுல்தான் என்பது கருதுகிறார். இருப்பினும், பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இந்த வழக்கத்திற்கு மாறான அனுமானத்தை நிராகரிக்கின்றனர். [11] [12]

இவாஸ் கல்ஜியின் ஆட்சிக் காலத்திய கல்வெட்டில் காணப்படும் ஒரு பெயர் இவரை அவரது மகன் என்று குறிப்பிடுகிறது. [13]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Minhāju-s Sirāj (1881). Tabaḳāt-i-nāsiri: a general history of the Muhammadan dynastics of Asia, including Hindustān, from A.H. 194 (810 A.D.) to A.H. 658 (1260 A.D.) and the irruption of the infidel Mughals into Islām. Royal Asiatic Society of Bengal (printed by Gilbert & Rivington).
  2. the Khiljī tribe had long been settled in what is now Afghanistan ... Khalji Dynasty பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம். Encyclopædia Britannica. 2010. Encyclopædia Britannica. 23 August 2010.
  3. Satish Chandra (2004). Medieval India: From Sultanat to the Mughals-Delhi Sultanat (1206-1526) - Part One. Har-Anand.
  4. Ashirbadi Lal Srivastava (1966). The History of India, 1000 A.D.-1707 A.D. (Second ed.). Shiva Lal Agarwala.
  5. Abraham Eraly (2015). The Age of Wrath: A History of the Delhi Sultanate. Penguin Books.
  6. Radhey Shyam Chaurasia (2002). History of medieval India: from 1000 A.D. to 1707 A.D. Atlantic.
  7. The History of Bengal. Academica Asiatica. 1973.
  8. Azim, Firdous, ed. (2002). Politics and Culture: Essays in Honour of Serajul Islam Choudhury. தாக்கா பல்கலைக்கழகம். p. 343.
  9. Epigraphy and Islamic Culture: Inscriptions of the Early Muslim Rulers of Bengal (1205-1494). Taylor & Francis. 2015.
  10. Hameed, Syeda Saiyidain, ed. (1992). Contemporary Relevance of Sufism. Indian Council for Cultural Relations. p. 105.
  11. মুসলিম-বাংলার ইতিহাস ও ঐতিহ্য.
  12. মুদ্রায় ও শিলালিপিতে মধ্যযুগের বাংলার সমাজ সংস্কৃতি, 1200-1538 খ্রি. Bangla Academy. 1999. p. 67.
  13. Mukhopadhyay, Sukhamay (1988). বাংলায় মুসলিম অধিকারের আদি পর্ব, 1204-1338 খ্রীঃ (in Bengali). Sāhityaloka. pp. 40–44.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_ஷேர்_கல்ஜி&oldid=3827766" இலிருந்து மீள்விக்கப்பட்டது