அலீ
முகம்மது நபியின் பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான அலீ அவர்கள் நான்காவது கலீபாவாகப் பதவி வகித்தார். அலி ராசிதுன் கலீபாக்களில் நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். உதுமானின் படுகொலைக்குப் பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதைத் தொடர்ந்து பலர் அலீ அவர்களை அடுத்த கலீபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்றுப் பொறுப்பேற்ற அலீ தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியாவின் ஆளுநர் முஆவியா என்பவர், அலீக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிஜிய்யாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.
ʿஅலி இப்னு அபீ தாலிப் | |
---|---|
நம்பிக்கையாளர்களின் தளபதி (அமீருல் முஃமினீன்) | |
கலீபா அலீயின் பேரரசு காலம் 661, இளம் பச்சையில் இருப்பது அலீயின் ஆட்சியின் கீழ் இல்லாதவை. | |
காலம் | 656–661[1] |
Full name | அலீ இப்னு அபீ தாலிப் |
பட்டங்கள் | ஹசனின் தந்தை (அரபி: அபுல் ஹசன்) புளுதி/மண்ணின் தந்தை (அரபி: அபூ துராப்) முர்தளா ("One Who Is Chosen and Contented") இறைவனின் சிங்கம் (Arabic: Asad-ullah) சிங்கம் (அரபி: Haydar)[1] முதல் அலீ(ரலி) |
பிறப்பு | [2], மார்ச்சு 17, 599 or
மார்ச்சு 17, 600
[1] | அக்டோபர் 23, 598
பிறந்த இடம் | கஃபா, மக்கா[1] |
இறப்பு | சனவரி 28, 661 | (அகவை 62)
இறந்த இடம் | கூபா[1] |
அடக்கத்தலம் | இமாம் அலீ பள்ளி, நஜாப், ஈராக் |
முன் ஆட்சிசெய்தவர் | சியா இமாம்கள் முகம்மது என்றும் /உதுமான் இப்னு அஃப்ஃபான் கலீபா என்று ஏனையோரும் |
பின் ஆட்சிசெய்தவர் | ஹசன்[3]/முஆவியா I |
Wives | பாத்திமா[1] Fatima bint Hizam al-Qilabiyya ("Ummu l-Banin") |
Offspring | ஹசன் ஹுசைன் ஸைனப் (See:Descendants of Ali ibn Abi Talib ) |
Father | அபூ தாலிப் |
Mother | பாத்திமா பின்து அஸத் |