அலுமினியம் குளோரோ ஐதரேட்டு

வேதிச் சேர்மம்

அலுமினியம் குளோரோ ஐதரேட்டு (Aluminum chlorohydrate) என்பது AlnCl(3n-m)(OH)m என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் அலுமினியம் உப்புகளின் ஒரு குழுவாகும். அலுமினியம் குளோரோ நீரேற்று என்றும் இதை அழைக்கலாம். அழகியலில் வாசனை நீக்கியாகவும் தண்ணீரை தூய்மையாக்கலில் உறை பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

நீர் சுத்திகரிப்பில், இந்த சேர்மம்அதன் உயர் மின்சுமை காரணமாக சில சந்தர்ப்பங்களில் விரும்பப்படுகிறது. அலுமினியம் சல்பேட்டு, அலுமினியம் குளோரைடு மற்றும் பல்வேறு வகையான பல்லலுமினியம் குளோரைடு, மற்றும் பல்லலுமினியம் குளோரிசல்பேட்டு போன்ற பிற அலுமினியம் உப்புகளை விட இடைநீக்கம் செய்யப்பட்ட பொருட்களை நிலைப்புத்தன்மையற்றும் தொங்கல் பொருள்களை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாகவும் செயல்படுகிறது. மேலே கூறப்பட்டுள்ள உப்புகளில் அலுமினியம் கட்டமைப்பு அலுமினியம் குளோரோ ஐதரேட்டைக்காட்டிலும் குறைவான நிகர மின்சுமையை விளைவிக்கிறது. மேலும், ஐதரோகுளோரிக் அமிலத்தின் உயர் நடுநிலையாக்கல் வீதம் அதிக அளவில் இருப்பதால் மற்ற அலுமினியம் மற்றும் இரும்பு உப்புகளுடன் ஒப்பிடும்போது சுத்திகரிக்கப்படும் நீரின் அமிலக்காரத்தன்மை அளவு மீது இது குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பயன்கள்

தொகு

அலுமினியம் குளோரோ ஐதரேட்டு வணிக வாசனை நீக்கிகளில் அடங்கியுள்ள மிகவும் பொதுவான செயல்படும் உட் பொருட்களில் ஒன்றாகும் [1]. Al2Cl(OH)5. என்ற சேர்மமே பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு வாசனை நீக்கியாகும்.

அலுமினியம் குளோரோ ஐதரேட்டு நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் செயல் முறையில் கரைந்துள்ள கரிமச் சேர்மங்களையும் தொங்கல்களில் இருக்கும் கூழ்மத்துகள்களை அகற்றவும் பயன்படும் உறை பொருளாக பயன்படுகிறது.

பாதுகாப்பு

தொகு

ஒரு வாசனை நீக்கியாக அலுமினியம் குளோரோ ஐதரேட்டின் பயன்பாடு பாதுகாப்பானது என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கருதுகிறது, மேலும் இது 25% அடர்த்தி அளவு வரை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது[2]

அல்சைமர் நோய்

தொகு

வாசனை நீக்கியின் நீண்ட கால பயன்பாடு மற்றும் வெளிப்பாடு மற்றும் அல்சைமர் நோய் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு மிகக் குறைவான தொடர்பை மட்டுமே ஆய்வுகள் கண்டறிந்துள்ளன[3]. வாசனை நீக்கிகளில் பயன்படுத்தப்படும் அலுமினியம் முன்கூடிய முதுமை மற்றும் அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கிறது என்பதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை[4]. அல்சைமர் சங்கத்தின் மருத்துவ மற்றும் விஞ்ஞான உறவுகளின் மூத்த இணை இயக்குநர் ஈதர் எம் சினைடர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.. அலுமினியத்திற்கும் அல்சைமர் நோய்க்கும் இடையிலான இணைப்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்த ஆய்வு முடிவும் இவற்றுக்கு இடையில் இணைப்பு இருக்கிறது என்று தெரிவிக்கவில்லை[5].

மார்பகப் புற்றுநோய்

தொகு

அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இத்தகைய சில இரசாயனங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என கருவுறுதல் மற்றும் மகளிர் மருத்துவத்தின் பன்னாட்டு பத்திரிகை, தெரிவிக்கிறது. வாசனை நீக்கிகளைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் இயக்குநர் டெட் எசு. கன்சுலர் கூறியுள்ளார்[5].. இருப்பினும், அழகுசாதனப் பொருட்களில் அலுமினியம் குளோரோ ஐதரேட்டைப் பயன்படுத்துவதில் கவலை உள்ளது. ஏனெனில் காலப்போக்கில் நச்சுத்தன்மை உருவாகும் ஆபத்து இதுவரை நிராகரிக்கப்படவில்லை[6]. நுகர்வோர் பாதுகாப்புக்கான விஞ்ஞானக் குழு (எஸ்.சி.சி.எஸ்) தற்போது நச்சு கட்டமைப்பின் அபாயத்தை மதிப்பிடுவதற்காக தோல் ஊடுருவல் வழியாக அலுமினியம் குளோரோ ஐதரேட்டு உட்புகுந்து நச்சு உருவாக்குவதை ஆய்வு செய்ய ஒரு ஆய்வை வடிவமைத்து வருகிறது[7].

கட்டமைப்பு

தொகு

அலுமினியம் குளோரோ ஐதரேட்டு ஒரு கனிம பலபடிச் சேர்மம் என்ற சிறப்புடன் விவரிக்கப்படுகிறது, மேலும் இதை கட்டமைப்புரீதியாக வகைப்படுத்தப்படுவது கடினம். எனினும், இது போன்ற தொழில்நுட்பங்கள் கூழ்மகளிம ஊடுருவல் நிறமாலையியல் , எக்சு கதிர் படிகவியல் மற்றும் 27அலுமினியம் -அணுக்கரு காந்த ஒத்ததிர்வு போன்ற முறைகளில் நாசர்[8] மற்றும் லேடன் உட்பட பல்வேறு குழுக்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. வருகின்றன. அலுமினியம் குளோரோ ஐதரேட்டின் உட்பொருள் அலுமினியம் 13 அலகுகளை அடிப்படையாக கொண்டு கெக்கின் அயனி அமைப்பில் உள்ளது என்றும் இந்த அடிப்படை அலகு சிக்கலான மாற்றங்களுக்கு உட்பட்டு பெரிய பல்-அலுமினிய அணைவுகளை உருவாக்குகிறது என்பதையும் நிருபிக்கவே இந்த ஆய்வுகள் முயல்கின்றன.

தயாரிப்பு

தொகு

அலுமினியத்தை ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்வதன் மூலம் அலுமினியம் குளோரோ ஐதரேட்டை வணிக ரீதியாக தயாரிக்க முடியும். அலுமினியம் உலோகம், அலுமினா டிரை ஐதரேட்டு , அலுமினியம் குளோரைடு, அலுமினியம் சல்பேட்டு மற்றும் இவற்றின் சேர்க்கைகள் உட்பட பல அலுமினியம் கொண்ட மூலப்பொருட்களை இதற்காகப் பயன்படுத்தலாம். விளையும் தயாரிப்புகளில் சோடியம் / கால்சியம் / மெக்னீசியம் குளோரைடு அல்லது சல்பேட்டு போன்ற துணை விளை பொருட்களும் கலந்து இருக்கலாம்[9]. ஐதரோ குளோரிக் அமிலத்துடன் அலுமினிய, உலோகம் வினைபுரியும்போது உருவாகும் ஐதரசன் வாயு வெடி விபத்துக்கு வாய்ப்பிருப்பதால் இம்முறை அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக மிகவும் பொதுவான தொழில்துறை தயாரிப்பு முறையில் அலுமினியம் குளோரோ ஐதரேட்டு கரைசல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக அலுமினியம் ஐதராக்சைடுடன் ஐதரோகுளோரிக் அமிலம் வினைபுரியச் செய்யப்பட்டு இக்கரைசல் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "[Antiperspirants and deodorants—ingredients and evaluation]" (in German). Dermatosen in Beruf Und Umwelt 37 (2): 53–7. 1989. பப்மெட்:2656175. 
  2. Code of Federal Regulations Title 21 வார்ப்புரு:CodeFedReg
  3. "The association between aluminum-containing products and Alzheimer's disease". Journal of Clinical Epidemiology 43 (1): 35–44. 1990. doi:10.1016/0895-4356(90)90053-R. பப்மெட்:2319278. https://archive.org/details/sim_journal-of-clinical-epidemiology_1990_43_1/page/35. 
  4. Exley C (March 1998). "Does antiperspirant use increase the risk of aluminum-related disease, including Alzheimer's disease?". Molecular Medicine Today 4 (3): 107–9. doi:10.1016/S1357-4310(98)01209-X. பப்மெட்:9575492. 
  5. 5.0 5.1 "Antiperspirant Safety: Should You Sweat It?". WebMD.
  6. "Aluminium salts in antiperspirants | Breast Cancer UK". www.breastcanceruk.org.uk. Archived from the original on 2019-08-24. பார்க்கப்பட்ட நாள் 2019-04-15.
  7. "The safety of Aluminium in cosmetic Products" (PDF). Scientific Committee on Consumer Safety. 7 March 2017. Archived from the original (PDF) on 15 April 2019. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
  8. "Speciation and Thermal Transformation in Alumina Sols: Structures of the Polyhydroxyoxoaluminum Cluster [Al30O8(OH)56(H2O)26]18+ and Its δ-Keggin Moieté". Journal of the American Chemical Society 122 (15): 3777–8. 2000. doi:10.1021/ja993711. 
  9. American National Standards Institute (1993). AWWA standard for liquid poly aluminum chloride. Denver: American Water Works Association. இணையக் கணினி நூலக மைய எண் 31849037.