அலெக்சாண்டர் அர்புசோவ்

உருசிய வேதியியலாளர்

அலெக்சாண்டர் எர்மினிங்கெல்டோவிச்சு அர்புசோவ் (Aleksandr Erminingeldovich Arbuzov) உருசியப் பேரரசைச் சேர்ந்த ஒரு சோவியத் வேதியியலாளர் ஆவார். இவர் 1877 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் பிறந்தார். மைக்கேலிசு-அர்புசோவ் வினை என்ற ஒரு வேதி வினையை இவர் கண்டுபிடித்தார்.

அலெக்சாண்டர் அர்புசோவ்
Aleksandr Arbuzov
அலெக்சாண்டர் அர்புசோவ்
பிறப்பு(1877-10-12)அக்டோபர் 12, 1877
இறப்புசனவரி 22, 1968(1968-01-22) (அகவை 90)
பணியிடங்கள்கசான் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கசான் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்அலெக்சாண்டர் மிக்காய்லோவிச்சு சாயிட்செவ்
அறியப்படுவதுமைக்கேலிசு-அர்புசோவ் வினை

பில்யார்சுக் நகரத்தைச் சேர்ந்த அர்புசோவ் கசான் பல்கலைக்கழகத்தில் அலெக்சாண்டர் மிக்காய்லோவிச்சு சாயிட்செவ்வின் மேற்பார்வைவையில் கல்வி கற்றார் .[1]. 1900 ஆம் ஆண் ஆண்டில் பட்டம் பெற்ற இவர் 1911 ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்பொருக்குப் பின்னர் அர்புசோவ் சோவியத் கரிம வேதியியல் நிறுவனத்தின் பொருப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1943 ஆம் ஆண்டு அர்புசோவுக்கு உருசியாவின் மாநில விருதான சிடாலின் விருது வழங்கப்பட்டது.

தான் மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகளுடன் அர்புசோவ் கூடுதலாக கரிம வேதியியல் வளர்ச்சிக்கு ஒரு சுருக்கமான வழிமுறை என்ற தலைப்பில் நூல் ஒன்றையும் (1948) உருசிய மொழியில் எழுதியுள்ளார்.

1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 22 ஆம் ஆம் நாள் அர்புசோவ் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_அர்புசோவ்&oldid=4041316" இலிருந்து மீள்விக்கப்பட்டது