அலெக்சாண்டர் சவீனொவ்
அலெக்சாண்டர் இவானொவிச் சவீனொவ் (Alexander Ivanovich Savinov, உருசியம்: Алекса́ндр Ива́нович Сави́нов, சூலை 17, 1881 - பெப்ரவரி 25, 1942) உருசிய சோவியத் ஓவியர். இவர் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்களை வரைந்துள்ளார். லெனின்கிராட் நகரைச் சேர்ந்த இவர் “லெனின்கிராட் பள்ளி” ஓவியப் பாணியின் முக்கிய ஓவியர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.
அலெக்சாண்டர் இவானொவிச் சவீனொவ் Алекса́ндр Ива́нович Сави́нов | |
---|---|
கல்வி | ரேப்பின் கலைக் கல்லூரி |
அறியப்படுவது | ஓவியம் வரைதல் |
அரசியல் இயக்கம் | யதார்த்தவாதம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசவீனொவ் சரத்தோவ் என்னும் ஊரில் மர வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். 1902-1908 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் இம்பீரியல் கலைக் கல்லூரியில் கல்வி பயின்று பட்டம் பெற்ற பின்னர் இத்தாலி சென்று ஓவியக் கலையில் மேலும் பயிற்சி பெற்றார். இத்தாலியில் இருந்து திரும்பியவர் லெனின்கிராட் ஓவியப் பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.[1].
இவரது புகழ் பெற்ற ஓவியங்கள் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள உருசிய அரசு அருங்காட்சியகம், மற்றும் பிரித்தானியா, பிரான்ஸ் உட்படப் பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Anniversary Directory graduates of Saint Petersburg State Academic Institute of Painting, Sculpture, and Architecture named after Ilya Repin, Russian Academy of Arts. 1915 - 2005. - Saint Petersburg: Pervotsvet Publishing House, 2007.- p.43-46, 48.