அலெக்சாந்தர் துபியான்ஸ்கி

உருசிய தமிழறிஞர்
(அலெக்சாண்டர் துபியான்ஸ்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அலெக்சாந்தர் மிகைலொவிச் துபியான்ஸ்கி (Alexander Dubyanskiy, உருசியம்: Алекса́ндр Миха́йлович Дубя́нский, ஏப்ரல் 27, 1941 – நவம்பர் 18, 2020)[1] என்பவர் உருசியத் தமிழ்ப் பேராசிரியராவர். இவர் உருசியாவில் மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார்.[2] அத்துடன் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர்.

அலெக்சாந்தர் துபியான்ஸ்கி
Alexander Dubyanskiy
Алекса́ндр Миха́йлович Дубя́нский
தாய்மொழியில் பெயர்Алекса́ндр Миха́йлович Дубя́нский
பிறப்பு(1941-04-27)27 ஏப்ரல் 1941
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
இறப்புநவம்பர் 18, 2020(2020-11-18) (அகவை 79)
மாஸ்கோ, உருசியா
இறப்பிற்கான
காரணம்
கோவிட்-19 பெருந்தொற்று
தேசியம்உருசியர்
பணிபேராசிரியர்
பணியகம்மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதமிழறிஞர்

தமிழ்ப் பணி

தொகு

மொசுக்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வந்த இவர்,[3] உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்வர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்பியதுடன், தமிழ்நாட்டு பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவராக இருந்தார்.[4]

பழந்தமிழர் ஆய்வு

தொகு

பழந்தமிழர் கவிதைகள் குறித்து 1970-இல் Situation of separation in Old tamil poetry (Mullai theme) என்ற தலைப்பில் ஆய்வு நடத்தி, முனைவர் பட்டம் பெற்றார். இதற்கு ஆய்வு வழிகாட்டியாக செயல்பட்டவர் முனைவர் யூலியா அலிகாநோவா. தொடர்ந்து நடத்திய ஆய்வுகள் தொகுக்கப்பட்டு உருசிய மொழியில் நுாலாக, 1989-இல் வெளியிடப்பட்டது. பின் இது Ritual and Mythological Source of Early Tamil Poetry என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நுாலாக்கம் பெற்றது. தமிழில், திணைக்கொள்கை உருவாக்கமும் சடங்கியல் தொன்மவியல் மூலகங்களும்[5] என்ற தலைப்பில் புத்தகமாக சனவரி 2024 இல் வெளியிடப்பட்டுள்ளது. புதுடில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் பு. கமலக்கண்ணன் மொழியாக்கம் செய்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Скончался Александр Михайлович Дубянский பரணிடப்பட்டது 2020-11-18 at the வந்தவழி இயந்திரம், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
  2. "Tolkappiyam is not dependent on Sanskrit sources: Tamil scholar". Archived from the original on 2010-08-20. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
  3. "Prof Dubyanskiy is currently teaching Tamil and Indian literature in the Moscow State University". Archived from the original on 2008-09-28. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
  4. Dr Dubyanskiy Alexander speech in Tamil
  5. ISBN:978-81-2344-599-1