அலெக்சாண்டர் தோன்செங்கோ

அலெக்சாண்டர் அனதோலிவிச்சு தோன்சென்கோ (Alexander Anatolyevich Donchenko) செருமனி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார். 1998 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2023 ஆம் ஆண்டு திசம்பர் மாத நிலவரப்படி செருமனி நாட்டு சதுரங்க வீரர்கள் தரவரிசையில் இவர் 4ஆவது இடத்தில் இருந்தார்.[1]

அலெக்சாண்டர் தோன்செங்கோ
Alexander Donchenko
2021 ஆம் ஆண்டில் தோன்செங்கோ
முழுப் பெயர்அலெக்சாண்டர் அணடோலிவிச்சு தோன்செங்கோ
நாடுசெருமனி
பிறப்பு22 March 1998 (1998-03-22) (வயது 26)
மாஸ்கோ, உருசியா
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2015)
பிடே தரவுகோள்2636 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2684 (ஆகத்து 2023)
உச்சத் தரவரிசைஎண். 52 (ஆகத்து 2023)

சதுரங்க வாழ்க்கை

தொகு

1998 ஆம் ஆண்டில் பிறந்த தோன்சென்கோ 2012 ஆம் ஆண்டில் தனது பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டத்தையும்[2] 2015 ஆம் ஆண்டில் சதுரங்க கிராண்டுமாசுட்டர் பட்டத்தையும் பெற்றார்.[3] 2018 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் இவர் ஐரோப்பிய தனிநபர் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் பங்கேற்றார். அப்போட்டியில் 114 ஆவது இடத்தைப் பிடித்தார்.[4] 6/11 (+4–3=4) என்ற புள்ளிகளைப் பெற்றார்.[5] 2019 ஆம் ஆண்டில் மீண்டும் ஐரோப்பிய வெற்றியாளர் போட்டியில் பங்கேற்றார். 6½/11 (+5–3=3) என்ற புள்ளிகளுடன் 103 ஆவது இடத்தைப் பிடித்தார்.[6]

2019 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற சுவிட்சர்லாந்தின் பீல் மாசுட்டர்சு சதுரங்கப் போட்டியில் தோன்சென்கோ 6½/9 (+5–1=3) புள்ளிகளுடன் கட்டா காம்சுகியுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். இப்போட்டியின் வெற்றியாளர் அமின் தபாதாபாய் இவர்களை விட அரை புள்ளிகள் அதிகம் பெற்றார். இதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 27 முதல் அக்டோபர் மாதம் 5 வரை நடைபெற்ற பார்சிலோனா திறவுநிலை போட்டியிலும் இவர் பங்கேற்று விளையாடினார். 7½/9 (+6–0=3) என்ற புள்ளிகளைப் பெற்று தெளிவான முதல் இடத்தைப் பிடித்தார்.[7]

2021 ஆம் ஆண்டு டாடா எஃகு மாசுடர்சு போட்டியில் தேனியல் டுபோவுக்குப் பதிலாக இவர் தாமதமாக மாற்றப்பட்டார். ஏனெனில் தேனியல் டுபோவு கோவிட்-19 பெருந்தொற்றுக்கான பரிசோதனையில் நேர்மறையாக முடிவு காரணமாக விலகினார்.[8] தோன்சென்கோ 3½/13 (+0–6=7) என்ற புள்ளிகளுடன் அப்போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்தார்.[9]

2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் லாத்வியா நாட்டில் நடைபெற்ற இரிகா தொழில்நுட்ப பல்கலைக்கழக திறவு நிலை "ஏ" போட்டியில் வெற்றி பெற்றார்.[10]

ஜனவரி 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் நடைபெற்ற டாடா எஃகு சதுரங்க மாசுட்டர்கள் போட்டியில் ஒரு சுற்று எஞ்சியிருக்கும் நிலையிலேயே இவர் வெற்றி பெற்றார். 2024 ஆம் ஆண்டுக்கான டாடா எஃகு சதுரங்க மாசுட்டர்கள் போட்டிக்கும் தகுதி பெற்றார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

உருசியாவின் மாசுகோ நகரத்தில் பிறந்த தோன்செங்கோ சிறு குழந்தையாக இருந்தபோதே செருமனிக்கு குடிபெயர்ந்தார்.[7] பன்னாட்டு சதுரங்க மாசுட்டரான அனதோலி தோன்செங்கோ இவரது தந்தையாவார்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. "FIDE Chess Ranking and Statistics". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-02.
  2. 83rd FIDE Congress, Istanbul, TUR, 27 Aug - 10 Sept 2012 FIDE
  3. 1st quarter Presidential Board Meeting, 26-29 April 2015, Chengdu, CHN FIDE
  4. "European Individual Chess Championship 2018". Chess Results. 28 March 2018.
  5. "European Individual Chess Championship 2018: Donchenko Alexander". Chess Results. 28 March 2018.
  6. European Individual Chess Championship 2019: Donchenko Alexander chess-results
  7. 7.0 7.1 Colodro, Carlos Alberto (7 October 2019). "Alexander Donchenko prevails in Barcelona". ChessBase.
  8. Donchenko playing in Wijk! ChessBase
  9. Jorden van Foreest gewinnt das Tata-Steel-Turnier ChessBase
  10. "Chess-Results Server Chess-results.com - Riga Technical University Open 2021 - Tournament A". chess-results.com.
  11. McGourty, Colin (29 January 2023). "Tata Steel 12: Abdusattorov on brink as Carlsen misses win". chess24.com. chess24. பார்க்கப்பட்ட நாள் 29 January 2023.
  12. Donchenko, Anatoly FIDE Chess Profile