அலெக்சாந்தர் வாலண்டினோவிச் சாகரோவ்

அலெக்சாந்தர் வாலண்டினோவிச் சாகரோவ் (Alexander Valentinovich Zakharov) (உருசியம்: Александр Валентинович Захаров, பிறப்பு: ஜூன் 1, 1941) ஓர் உருசிய சோவியத் தலைமை அறிவியலாளரும் உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த வானியலாளரும் ஆவார்.[1] இவர் தோல்வியில் முடிந்த செவ்வாய் 96, போபோசு- கிரண்ட் ஆகிய செவ்வாய்த் திட்டங்களின் தலைமை அறிவியலாளர் ஆவார்.[2][3]

அலெக்சாந்தர் வாலண்டினோவிச் சகாரோவ்
Alexander Valentinovich Zakharov
பிறப்புசூன் 1, 1941 (1941-06-01) (அகவை 82)
மாஸ்கோ
தேசியம்உருசியர்
துறைமின்ம இயற்பியல் (Plasma physics)
பணியிடங்கள்உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ வானூர்தியியல் நிறுவனம்
மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம்

வாழ்க்கை தொகு

செவ்வாய் 96 திட்டம் முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, சாகரோவ் விண்கலக் கட்டுபாட்டு அமைப்பில் தவறு இருந்த்தெனும் முடிவுக்கு வந்தார். எனவே செவ்வாய்க்குச் செல்லும் முயற்சியை மீண்டும் மேற்கொள்ள முன்மொழிந்துள்ளார்.[4]

இவர் 1999 இல் போபோசு-கிரண்ட் பதக்கூறு கொணரும் திட்ட இயலுமையை மதிப்பிட்டு ஆயும் அறிவியலாளரானார்.[3]

இவரை 2007 இல் மேட் கப்லான் புரூசு பெட்சு, டாம் டக்சுபரி ஆகியோருடன் இணைந்து கோள் வானொலி வாய்ப்பு பற்றி நேர்கானல் மேற்கொண்டனர்.[5]

இவர் 2008 இல் கோளியல் கழகத்தின் வாழும் கோளிடைப் பறத்தல் செய்முறைக் குழுவின் உறுப்பினரானார். அப்போது, வாழ்தகவு உயிர் வாழ்தகவு பெட்டகத்தை மீளியல்பு பெட்டகமாகவும் மாற்றி வடிவமைப்பதற்கான பொறுப்பை ஏற்றார்.

போபோசு-கிரண்ட் தோல்வி குறித்து கோளியல் கழக உறுப்பினர்களுக்கு அறிக்கை அனுப்பினார்.[6] ஆய்கலம் 2012 ஜனவரி 15 இல் தென்பசிபிக் கடலில் வீழ்ந்ததும் இது உருசிய அறிவியல் குமுகாயத்துக்கு அவலம் ஊட்டிய நிகழ்ச்சி எனக் கூறினார். போபோசு மண் படக்கூறுகள் பெறப்பட்டிருந்தால் அவற்றின் ஆய்வு சூரினின் தொற்றம் பற்றிய கமுக்கங்களை அறிந்திருக்கலாம் எனவும் வாதிட்டார்.[7] பின்னர் இவர் இரியூடெர்சுக்கு ஆய்கலம் தாழ்புவி வட்டணையில் தடுமாறியதற்கு பல காரணங்களைக் கூறினாலும் தனித்த இந்த காரணத்தால் தான் எனப் பிரித்துக் கூறவில்லை. பிறகு பறப்பு அமைப்போ கணினி நிரலோ அடைந்த சிக்கலால் , அதாவது அவை குறிப்பாக விண்வெளி கதிர்வீச்சுக்கு வடிவமைக்கப்படாததால் தோல்வி நேர்ந்திருக்கலாம் எனப் பரிந்துரைத்தார்.[2]

கோளியல் கழக இயக்குநர் இலெவ் செலெனி கேட்டுக்கொண்டபடியும் அதை உரோசுகாசுமோசு அமைப்பு ஏற்றுக்கொண்டு அறிவித்தபடியும் போபோசு-கிரண்ட் பதக்கூறு கொணரும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என நம்பிக்கை கொண்டிருந்தார். என்றாலும், இதற்கிடையில் உருசியா ஐரோப்பிய விண்வெளி முகமையுடன் புறச்செவ்வாய் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யவே அத்திட்டத்தில் உருசிய விண்வெளி மையம் கவனம் குவிக்க நேர்ந்த்து. ஆனாலும் போபோசு பதக்கூறு கொணர்திட்டம் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பில்லையென உறுதியாக ஏதும் அவர் கூறவில்லை.[8][9][10][11]

இவர் செவ்வாய் அறிவியல் தேட்டம் பற்றி உரையாற்ற, 2012 ஆகத்து 13 இல் இருந்து 17 வரை சிங்கப்பூரில் உலகச் செந்தோசா தங்கிடத்தில் நடைபெற்ற ஆசியா ஓசியானியா புவி அறிவியல் கழக்க் கூட்டு மன்றத்துக்கு வரத் திட்டமிட்டுள்ளார்.[12][தெளிவுபடுத்துக]

நூல்தொகை தொகு

  • Zelenyi, L. M.; Zakharov, A. V. (2010). "Phobos-Grunt project: Devices for scientific studies". Solar System Research 44 (5): 359. doi:10.1134/S0038094610050011. 

மேற்கோள்கள் தொகு

  1. Vergano, Dan (2012-01-08). "Underfunding doomed Russian Mars probe, lawyer says". USA TODAY. http://www.usatoday.com/tech/science/space/story/2012-01-08/russian-mars-probe/52457434/1. பார்த்த நாள்: 23 March 2012. "mission scientist Alexander Zakharov of the Space Research Institute in Moscow" 
  2. 2.0 2.1 de Carbonnel, Alissa (2012-01-31). "Russia blames Mars probe failure on space radiation". Reuters இம் மூலத்தில் இருந்து 2012-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120203123404/http://www.reuters.com/article/2012/01/31/russia-spacecraft-idUSL5E8CV3TU20120131. பார்த்த நாள்: 27 February 2012. 
  3. 3.0 3.1 "Mars Moon Lander to Return Russia to Deep Space". The Moscow Times. 8 Nov 2011. http://www.themoscowtimes.com/news/article/mars-moon-lander-to-return-russia-to-deep-space/447350.html. 
  4. "Life After Mars '96". Science NOW. 20 November 1996 இம் மூலத்தில் இருந்து 21 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130621012023/http://news.sciencemag.org/sciencenow/1996/11/20-04.html. பார்த்த நாள்: 23 March 2012. 
  5. ""To Phobos and Back"". "Planetary Radio". No. 262. 00:25:52 minutes in. பரணிடப்பட்டது 2008-11-22 at the வந்தவழி இயந்திரம்
  6. [1]
  7. Sanderson, Katharine (January 18, 2012). "Phobos-Grunt Crashes Into the Pacific". Astrobiology Magazine. http://www.astrobio.net/pressrelease/4476/phobos-grunt-crashes-into-the-pacific. பார்த்த நாள்: 28 March 2012. 
  8. Warmflash, David (2011-12-08). "Scientist: Russia's Failed Mars' Moon Probe Worth a Second Try". பார்க்கப்பட்ட நாள் 11 February 2012.
  9. "Russia's participation in the "ExoMars" does not cancel the plans for the "Phobos-Grunt-2"". RIA Novosti. 20 March 2012. http://www.ria.ru/science/20120320/600999665.html. பார்த்த நாள்: 3 April 2012. 
  10. Konstantin Bogdanov (11 April 2012). "Russia to Go Back to the Moon Before Reaching for Mars". RIA Novosti. http://en.rian.ru/analysis/20120411/172746087.html. பார்த்த நாள்: 12 April 2012. 
  11. "Russian scientists do not abandon the study satellites of Mars" (in Russian). Russia Today. 13 April 2012 இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120926064534/http://inotv.rt.com/2012-04-13/Rossijskie-uchenie-ne-otkazivayutsya-ot. பார்த்த நாள்: 17 April 2012. 
  12. "AOGS - AGU (WPGM) Joint Assembly 2012". Archived from the original on 11 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.

வெளி இணைப்புகள் தொகு