அலைக்குறி
அலைக்குறி ( ~ ) (ஆங்கிலம்:tilde) என்பது பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ள அழுத்தற் குறியீடுகளில் ஒன்று. பெரும்பாலும் எசுப்பானியத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
பயன்பாடு
தொகுஎசுப்பானியத்தில், அலைக்குறி, N எழுத்துருவின் மீது இடப்பட்டால் ( Ñ ), அதனை [n] போலன்றி [ɲ] போல உச்சரிக்க வேண்டும்.
போர்த்துக்கேயத்தில் "a" (ã) மற்றும் "o" (õ) உயிரெழுத்து ஒலிகளை மூக்கின் மூலமாக வெளியிட குறிக்கும் குறியாகப் பயன்படுத்தப்படுகிறது.
யுனிக்சு இயக்குதளத்தில், அலைக்குறி பயனரின் "தாயக" தரவுத் தொகுப்பைக் குறிக்கிறது.
மேலும் ஏதாவது மதிப்பீடு ஏறத்தாழ உள்ளது என்று பொருள்பட அலைக்குறிப் பயனாகிறது. காட்டாக ~24 என்பது ஏறத்தாழ 24, சுமார் 24 எனப் பொருள்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "tilde". The Chambers Dictionary (9th ed.). Chambers. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-550-10105-5.
- ↑ Martin, Charles Trice (1910). The record interpreter : a collection of abbreviations, Latin words and names used in English historical manuscripts and records (2nd ed.). London, preface, p.5 [1]
- ↑ Mackenzie, Charles E. (1980). Coded Character Sets, History and Development (PDF). The Systems Programming Series (1 ed.). Addison-Wesley Publishing Company, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-201-14460-4. LCCN 77-90165. Archived (PDF) from the original on மே 26, 2016. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 25, 2019.