அலைபேசி அருங்காட்சியகம் (ஸ்லோவாகியா)

அலைபேசி அருங்காட்சியகம் (museum-of old mobile phones) என்பது சிலோவாக்கியாவைச் சேர்ந்தவ ஸ்டீபன் போல்காரி என்பவர் சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியமாகும். இவர் இதுவரை 3500 அலைபேசிகளை சேகரித்து வைத்திருக்கிறார்.[1] 15 வயதிலிருந்தே ஸ்டீபனுக்கு அலைபேசிகளின் மீது ஆர்வம் அதிகம். தொழில்நுட்ப ரீதியாக நிறைய கற்றுக் கொண்டார்.

அலைபேசிகளை சேகரிக்கும் முயற்சியில் இறங்கிய இவர், பழைய அலைபேசியை சேகரித்த ஒருவரிடம் 1000 அலைபேசிகளை மிக குறைந்த விலைக்கு வாங்கினார். பிறகு தன்னுடைய சேமிப்பில் இல்லாத அலைபேசிகளை சேகரிக்க ஆரம்பித்தார்.

இன்று இவரிடம் 1,231 மாதிரிகளில் 3,500 அலைபேசிகள் இருக்கின்றன. செங்கல் போன்று இருந்த நோக்கியா 3310 மாதிரிகளிலிருந்து தொடுதிரை ஸ்மார்ட் அலைபேசிகள் வரை இவரது சேகரிப்பில் உள்ளது. இவரது வீட்டிலேயே அலைபேசி அருங்காட்சியகம்த்தை வைத்திருக்கிறார். சிறிய மர அலமாரிகளில் வீடு முழுவதும் அலைபேசிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்லோவாகியா சாதனைப் புத்தகத்தில் ஸ்டீபன் போல்காரி இடம் பெற்றிருக்கிறார்.

மேற்கோள்

தொகு