அலைவாய் என்னும் ஊர் திருச்சீரலைவாய் என்று போற்றப்படுகிறது. இக்காலத்தில் இவ்வூர் திருச்செந்தூர் என்னும் பெயருடன் திகழ்கின்றது. நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை என்னும் நூலில் இவ்வூர் ஆறு படைவீடுகளில் ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது.[1]

பரத்தையிடம் போய்வந்த ஒருவன் தன் வீட்டுக்குத் திரும்பியபோது தன் மனைவியிடம் பரத்தையை அறியேன் என்று இந்த அலைவாய் முருகன்மேல் சத்தியம் செய்தான் என்று பரணர் குறிப்பிடுகிறார். கழனி உழவரின் ஆரவாரம் கேட்டு அங்கு மேய்த மயில்கள் அலைவாய் முருகள் கோயிலில் தஞ்சம் புகும் என்று பரணர் இவ்வூரின் வளத்தைக் குறிப்பிடுகிறார் [2]

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்தும் புலவர் மதுரை மருதன் இளநாகனார் செந்தில் கடற்கரை மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலநாள் வாழவேண்டும் என்கிறார் [3]

சான்று மேற்கோள் தொகு

  1. (அடி125).
  2. அகநானூறு 265
  3. புறநானூறு 55-18
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைவாய்&oldid=885241" இலிருந்து மீள்விக்கப்பட்டது