அலை எண்

அலை எண் (Wave number) என்பது ஒரு மீட்டரில் காணப்படும் அலைகளின் மொத்த எண்ணிக்கை ஆகும். மின்காந்த அலைகளின் திசைவேகம்,

C = νλ ஆகும்.

இங்கு λ என்பது அலை நீளமாகும். இதன் அலகு m−1 என்று கொடுக்கப்படுகிறது. ν என்பது அதிர்வெண்ணாகும். எனவே 1/λ என்பது ஒரு மீட்டரில் உள்ள அலைகளின் எண்ணாகும். இது ν −1 என்று எழுதலாம்.

E = hν. எனவே E ஃபோட்டானின் ஆற்றலைக் குறிக்கும்.

E = hc/λ.

இதுவே E= hcν−1 ஆகும்.

இச்சமன்பாடு, ஒளியனின் ஆற்றல், பிளாங்க் மாறிலி, அலை எண் இவைகளுக்குள்ள தொடர்பினைக் காட்டுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_எண்&oldid=2746076" இருந்து மீள்விக்கப்பட்டது