அல்க்காண்டர்

கி.மு. ஏழாம் நூற்றாண்டு எசுபார்ட்ட குடிமகன்

அல்க்காண்டர் ( Gr. Ἄλκανδρος அலெக்சாண்டரின் ஒரு வடிவம்) (கிரேக்க மக்களைப் பாதுகாப்பவர்) என்பவர் எசுபார்த்தாவின் ஒரு இளைஞர் ஆவார். இவர் இறுதியில் எசுபார்த்தன் கட்டளையாளராக (ஜெனரல்) ஆனார்.

எசுபார்த்தாவுக்கு லைகர்கசு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியபோது அதை பெரும்பாலானவர்கள் அங்கீகரித்தனர். ஆனால் உயர் வர்க்கத்தைச் சேர்ந்த அல்க்காண்டர் போன்ற சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இவர் லைகர்சு மீது சினம் கொண்டார். அப்போது லைகர்சின் ஒரு கண்ணைக் குத்திவிட்டார். ஆனால் லைகர்சின் ஒற்றைக் கண் கோலத்தையும் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அல்காண்டரை பிடித்து லைகர்சு முன் நிறுத்தி உரிய தண்டனையை அளிக்க வேண்டினர். லைகர்சு இவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் வீட்டிலேயே இருந்துவருமாறு கூறினார். அதன் பிறகு லைகர்சுடன் பழகும் வாய்ப்பு அல்காண்டருக்கு ஏற்பட்டது. அப்போது அவரின் அன்பும், நிதானமும், உழைப்பும் அல்காண்டரை புதிய மனிதராக்கியது. அதன்பிறகு லைகர்கசை தன் தலைவராக தன் ஆயுள்வரை ஏற்று வாழ்ந்தார்.[1]

குறிப்புகள்

தொகு
  1. வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். p. 112.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்க்காண்டர்&oldid=3376107" இலிருந்து மீள்விக்கப்பட்டது