அல்யா பின்த் அகமது அல் தானி

அல்யா பின்த் அகமது அல் தானி (Alya bint Ahmed Al Thani) ஓர் கத்தார் நாட்டின் தூதர் ஆவார். இவர் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கத்தாரின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். [1]

அல்யா பின்த் அகமது அல் தானி
ஐக்கிய நாடுகள் சபையின் கத்தாருக்கான நிரந்தர பிரதிநிதி
பதவியில் உள்ளார்
பதவியில்
24 அக்டோபர் 2013
முன்னையவர்மேஷல் ஹமாத் எம்.ஜே. அல் தானி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதோகா, கத்தார்
முன்னாள் கல்லூரிஇலண்டன் பல்கலைக்கழகம், கத்தார், பல்கலைக்கழகம்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவரது தந்தை அகமது பின் சைஃப் அல் தானி ஓர் முன்னாள் தூதர். இவரது மாமாவும் தூதராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் கத்தார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார் மற்றும் 2006 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகள் மற்றும் இராஜதந்திரத்தில் முதுகலை பெற்றார். [3]

பணிகள்

தொகு

இவர் 2004 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2007 ஆம் ஆண்டு மார்ச் வரை குடும்ப விவகாரங்களுக்கான உச்ச கவுன்சிலின் குழந்தைகளின் உரிமைகள் பிரிவின் இயக்குநராக பணியாற்றினார். [1] 2009 ஆம் ஆண்டின் ஜுன் மாதம் கத்தார் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2009 ஆம் ஆண்டு மே வரை ஐ.நா. விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டு மே முதல் 2011 ஆம் ஆண்டு ஜுலை வரை ஐ.நா.வின் கத்தார் துணை நிரந்தர பிரதிநிதியாகவும் பணியாற்றினார். 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று, இவர் ஐ.நாவின் கத்தார் நாட்டிற்கான நிரந்தர பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டார்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "New permanent representative of Qatar presents credentials". United Nations. 24 October 2013. பார்க்கப்பட்ட நாள் 17 March 2015.
  2. "Qatar's UN ambassador looks to break barriers". Al Monitor. 8 March 2015. Archived from the original on 2015-03-12. பார்க்கப்பட்ட நாள் 17 March 2015.
  3. "Curriculum vitae" (PDF). Office of the High Commissioner for Human Rights. பார்க்கப்பட்ட நாள் 17 March 2015.