அல்லாக்டைட்டு
ஆர்சனேட்டு கனிமம்
அல்லாக்டைட்டு (Allactite) என்பது Mn7(AsO4)2(OH)8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரியவகை ஆர்சனேட்டு கனிமம் ஆகும். வளருருமாற்ற மாங்கனீசு துத்தநாகத் தாது படிவுகளில் இக்கனிமம் தோன்றுகிறது. சுவீடன், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அல்லாக்டைட்டு கனிமம் கிடைக்கிறது. வலிமையான பல்வண்ண திசைப் படிகப் பண்பு கொண்ட்தாக இக்கனிமம் இருப்பதால், கிரேக்க மொழியில் மாற்றம் உடைய என்ற பொருள் கொண்ட அலாக்டெய்ன் என்ற வேர் சொல்லிலிருந்து இப்பெயர் தருவிக்கப்பட்டுள்ளது [2].
அல்லாக்டைட்டு Allactite | |
---|---|
பட்த்தின் அகலம் 3 மி.மீ | |
பொதுவானாவை | |
வகை | ஆர்சனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Mn7(AsO4)2(OH)8 |
இனங்காணல் | |
நிறம் | பழுப்பு, வெண்மையும் நிறமற்றும், இளம் ஊதாவும் சிவப்பும், பழுப்பும் சிவப்பும் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | தனித்தன்மை, {001} |
முறிவு | சம்மற்றது |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5 |
மிளிர்வு | பளபளப்பு, உடைந்த பகுதிகளில் இலேசான வழவழப்பு |
கீற்றுவண்ணம் | சாம்பல் முதல் பழுப்பு வரை |
ஒப்படர்த்தி | 3.83 (அளவிடப்பட்டது.), 3.94 (கணக்கிடப்பட்டது.) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.755–1.761 nβ = 1.772–1.786 nγ = 1.774–1.787 |
பலதிசை வண்ணப்படிகமை | X = இரத்தச் சிவப்பு; Y = வெளிர் மஞ்சள்; Z = கடல்-பச்சை |
2V கோணம் | ~0° |
மேற்கோள்கள் | [1][2][3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Allactite. Mindat
- ↑ 2.0 2.1 Allactite. Handbook of Mineralogy
- ↑ Moore P. (1968). "Crystal chemistry of the basic manganese arsenate minerals: II. The crystal structure of allactite". American Mineralogist 53: 733–741. http://www.minsocam.org/ammin/AM53/AM53_733.pdf.