அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் [அரபி:الله أكبر] [ஆங்கிலம்: Allāhu Akbar] என்பது இறைவனே மிகப் பெரியவன் என்ற பொருள் தரும் அரபுத் தொடராகும். இது தக்பிர் என்றும் அழைக்கப்படுகிறது. இத் தொடர் முஸ்லிம்களால் பல்வேறு வேளைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ஐந்து முறை நடைபெறும் தொழுகை அழைப்பும் அல்லாஹு அக்பர் என்றே தொடங்குகிறது. திருக்குர்ஆனில் இத் தொடர் மூன்று இடங்களில் வருகிறது[1]. ஈராக், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாட்டுக் கொடிகளிலும் இத்தொடர் இடம் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ திருக்குர் ஆன் (9:72,29:45,40:10)