அல்லா ஜிலாய் பாய்

அல்லா ஜிலாய் பாய் (Allah Jilai Bai)(1 பிப்ரவரி 1902[1] - 3 நவம்பர் 1992)[1] என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தினைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி ஆவார்.[1]

அல்லா ஜிலாய் பாய்
2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் அல்லா ஜிலாய் பாய்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1902-02-01)1 பெப்ரவரி 1902
ஜெய்சிங் தேசர் மக்ரா, பிகானேர், பிகானேர் இராச்சியம், பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு3 நவம்பர் 1992(1992-11-03) (அகவை 90)
இசை வடிவங்கள்நாட்டுப்புற கலை

இவர் பிகானேரில் பாடகர்களின் குடும்பத்தில் பிறந்தார்.[1] தனது 10ஆவது வயதில் மகாராசா கங்கா சிங்கின் அவையில் பாடத்தொடங்கினார்.[1] இவர் உசுதாத் உசைன் பக்சு கானிடமும், பின்னர் அச்சன் மகாராசாவிடமும் பாடல் தொடர்பாகக் கற்றுக்கொண்டார்.[1] ஒரு காலத்தில் பிகானேர் மகாராஜா கங்கா சிங்கின் அவையில் பாடினார்.[2]

இவர் மாண்ட், தும்ரி, காயல் மற்றும் தாத்ராவில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.[1] கேசரியா பலம் என்பது இவருக்கு மிகவும் பிரபலமானது.[1] 1982ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் இவரது கலைச் சேவையினைப் பாராட்டி பத்மசிறீ விருதை வழங்கியது.[3][1] இது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். 1988ஆம் ஆண்டு நாட்டுப்புற இசைக்காக இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் 2012ஆம் ஆண்டில் இவரது மரணத்திற்குப் பின் இராசத்தான் ரத்னா விருது வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Allah Jilai Bai". www.mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  2. 2.0 2.1 "Govt names seven for Rajasthan Ratna award". The Times of India (in ஆங்கிலம்). 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2023-01-12.
  3. Padma Shri Awardees. india.gov.in

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லா_ஜிலாய்_பாய்&oldid=3648884" இலிருந்து மீள்விக்கப்பட்டது