அல்லைல்பீனைல் ஈதர்

அல்லைல்பீனைல் ஈதர் (Allyl phenyl ether) என்பது C9H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தெளிவான இளமஞ்சள் நிறங்கொண்ட நீர்மமாகும். சாதாரன வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இது நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது. பெரும்பாலும் நிலைத்தன்மையுடன் இது காணப்பட்டாலும் இச்சேர்மம் சிதைவடைய நேரிட்டால் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப்புகைகளை வெளியேற்றுகிறது.

அல்லைல்பீனைல் ஈதர்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(அல்லைலாக்சி)பென்சீன்
வேறு பெயர்கள்
(2-புரோப்பினைலாக்சி)பென்சீன்; 3-பீனாக்சிபுரோப்பீன்; அல்லைலாக்சிபென்சீன்
இனங்காட்டிகள்
1746-13-0
ChemSpider 21159535
InChI
  • InChI=1S/C9H10O/c1-2-8-10-9-6-4-3-5-7-9/h2-7H,1,8H2 COPY
    Key: POSICDHOUBKJKP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • C=CCOc1ccccc1
பண்புகள்
C9H10O
வாய்ப்பாட்டு எடை 134.18 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அல்லைல்பீனைல் ஈத்தர் பல்வேறு பரிசோதனைகளுக்கு ஒரு நல்ல தொடக்கநிலை வினைப்பொருளாகச் செயல்படுகிறது. கிளெய்சன் மறுசீரமைப்பு வினை ஒரு எடுத்துக்காட்டாகும். இடத்தடங்கல் காரணமாக குறைவான உகந்த கட்டமைப்பில் இருப்பதாக தோற்றமளிக்கும் போது மறுசீரைப்பு வினையை இதனால் நிகழ்த்தமுடிகிறது. உண்மையில் அவசியமான இவ்வமைப்புநிலை அல்லைல்பீனைல் ஈதர் போன்ற சில சேர்மங்கள் மூலமாக மட்டுமே உருவாக்கப்பட முடியும் [1][2].

NaOPh (C6H5NaO), டெட்ரா-என்-பியூட்டலமோனியம் புரோமைடு போன்ற வினையாக்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும் முந்நீர்மநிலை வினையூக்க வினையினால் அல்லைல்பீனைல் ஈதர் தயாரிக்க இயலும். இத்தொகுப்பு வினையை பாதிக்கும் சில காரணிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன:[3]

  • பல்வேறுபட்ட வகையான உப்புகளின் அளவு (NaBr, KBr, Na2CO3)
  • வெப்பநிலை
  • உபயோகிக்கப்படும் கரிமக் கரைப்பான்கள்
  • NaOPh இன் மோல் பின்னம்

மேற்கோள்கள்

தொகு
  1. Castro, Ana M. Martin. “Claisen Rearrangement over the Past Nine Decades” Chemical Reviews 104, no. 6 (2004): 2939-3006.
  2. Yadav, G. D.; Lande, S. V., UDCaT-5: A Novel and Efficient Solid Superacid Catalyst for Claisen Rearrangement of Substituted Allyl Phenyl Ethers. Synthetic Communications 2007, 37 (6), 941-946.
  3. Hsu-chin Hsiao, J. D.; Hung-shan Weng, J. D., ANALYSIS OF FACTORS AFFECTING THE SYNTHESIS OF ALLYL PHENYL ETHER BY TRI-LIQUID-PHASE CATALYSIS. Chemical Engineering Communications 2004, 191 (5), 705-717
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லைல்பீனைல்_ஈதர்&oldid=2384509" இலிருந்து மீள்விக்கப்பட்டது