அல்ஹிலால்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அல்ஹிலால், இலங்கையில், கண்டி மாவட்டத்தில் கட்டுகாஸ்தோட்டை எனுமிடத்திலிருந்து மாதம் இருமுறை வெளிவந்த சிற்றிதழாகும். அல்ஹிலால் எனும் அரபுப் பதம் இளம்பிறை எனும் கருத்தைத்தரும்.
வெளியீடு
தொகுஅகில இலங்கை இஸ்லாமிய காங்கிரஸ், கட்டுகாஸ்தோட்டை, கலகெதரை வீதியை இச்சஞ்சிகை முகவரியாகக் கொண்டிருந்தது.
ஆசிரியர்
தொகு- புன்னியாமீன்
பணிக்கூற்று
தொகு- ஈழத்து முஸ்லிம்களின் உரிமைக்குரல்.
முதல் இதழ்
தொகுநவம்பர் 15 1980. இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1401ல் வெளிவந்துள்ளது.
நோக்கம்
தொகுஇச்சஞ்சிகை அரபுப் பெயரைக் கொண்டிருந்தபோதிலும்கூட, இலங்கை முஸ்லிம்களின் சமூகப் பிரச்சினையை கருத்திற்கொண்டே வெளிவந்துள்ளது. இதனை பத்திரிகையாசிரியர் முதலாவது இதழில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“ | “நீங்களாகவே உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாதவரையில் உங்கள் நிலையை இறைவன் மாற்றப்போவதில்லை” என்பது அருள்வாக்கு. எனவே, எமது சமூகம் அதன் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். இந்தப் பணியில் இளைஞர்களையும், வளர்ந்தோர்களையும் ஈடுபடச் செய்வதை அல்ஹிலால் தனது பணியாகக் கொண்டிருக்கும். | ” |
உள்ளடக்கம்
தொகுஇச்சஞ்சிகை இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்து கூடிய அக்கறை காட்டியுள்ளது. குறிப்பாக இலங்கையின் முஸ்லிம் சமூகத்துக்கு கல்வியில் இழைக்கப்படக்கூடிய அநீதிகளுக்காக வேண்டி குரல்கொடுத்து வந்துள்ளது. அத்துடன், முஸ்லிம்களின் சமூகப் பிரச்சினைகள், அரசாங்கத்தால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் சமூக ரீதியில் முஸ்லிம்களின் பாதிப்புகள் போன்ற இன்னோரன்ன விடயங்களை இது உள்ளடக்கியிருந்தது.
அரபுலக அரசியல்
தொகுஇச்சஞ்சிகையில் கடலுக்கப்பாலிருந்து எனும் தலைப்பில் அரபுலக அரசியல் நிலைகளும், உலக அரசியல் நிலைகளும் இரண்டு பக்கங்களில் இணைக்கப்பட்டிருந்ததுடன், அரபுலக நாடுகளின் அறிமுகமும் இடம்பெற்றிருந்தது. இச்சஞ்சிகையில் இடம்பெற்றிருந்த பல கட்டுரைகள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் உதயசூரியன் உட்பட பல இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டன.
அரசியல் நெருக்கடி
தொகுஇச்சஞ்சிகை வெளிவரத் தொடங்கியதும் பல அரசியல் நெருக்கடிகளுக்கு உட்பட்டுள்ளது. இதனால் 14வது இதழுடன் இச்சஞ்சிகை நிறுத்தப்பட்டுள்ளது.