அல்-கரீம் பல்கலைக்கழகம்

இந்திய தனியார் பல்கலைக்கழகம்

அல்-கரீம் பல்கலைக்கழகம் (Al-Karim University) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கட்டிகார் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும் [2]. 2018 ஆம் ஆண்டு அல்-கரீம் கல்வி அறக்கட்டளை பல்கலைக்கழகத்தை நிறுவியது. 1987 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கட்டிகார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையையும் இப்பல்கலைக்கழகம் பராமரிக்கிறது மற்றும் நிர்வகிக்கிறது [3]. பீகார் தனியார் பல்கலைக்கழக சட்டம் 2013 இன் கீழ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது [4]. பீகாரில் திட்டமிடப்பட்ட முதல் ஆறு தனியார் பல்கலைக்கழகங்களில் இந்நிறுவனமும் ஒன்றாகும் [5].

உருவாக்கம்2018
வேந்தர்அகமது அசுபாக் கரீம் [1]
துணை வேந்தர்சையது மும்தாசுதீன்[1]
அமைவிடம், ,
சேர்ப்புUGC
இணையதளம்www.alkarimuniversity.edu.in

இப்பல்கலைக்கழகம் எம்.பி.பி.எசு படிப்புகள் மற்றும் எம்.டி / எம்.எசு படிப்புகளை பல்வேறு மருத்துவ சிறப்புப் பாடப்பிரிவுகளில் வழங்குகிறது. இங்கு கூடுதலாக கதிரியக்க உருவரைவு மற்றும் ஆப்டோமெட்ரி எனப்படும் பார்வை அளவையியல், முடநீக்கியல் போன்ற பல்வேறு துணை மருத்துவ துறைகளில் 4½ ஆண்டு இளம் அறிவியல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன [6]. உயிர் வேதியியல் மற்றும் உடற்கூறியல் தொடர்புடைய மருத்துவ துறைகளில் 3 ஆண்டு மூன்று ஆண்டு முது அறிவியல் படிப்புகளும், கணினி பயன்பாடு பிரிவில் 3 ஆண்டு இளம் அறிவியல் பட்டப் படிப்புகளும் இங்கு வழங்கப்படுகின்றன [7].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "UGC pro forma" (PDF). Al-Karim University. p. 4. Archived from the original (PDF) on 18 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 18 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "State-wise List of Private Universities as on 25.09.2018" (PDF). www.ugc.ac.in. University Grants Commission. 25 September 2018. பார்க்கப்பட்ட நாள் 23 October 2018.
  3. "Who we are". www.alkarimuniversity.edu.in. Archived from the original on 19 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 18 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Bihar Private Universities Act, 2013" (PDF). Bihar Gazette. Government of Bihar. 1 November 2013. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.
  5. "Six private universities to come up in Bihar soon". United News of India. 9 March 2018. http://www.uniindia.com/six-private-universities-to-come-up-in-bihar-soon/states/news/1162869.html. பார்த்த நாள்: 4 November 2018. 
  6. "Admission to Post Graduate Degree Courses 2019". www.alkarimuniversity.edu.in. Al-Karim University. Archived from the original on 29 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 1 November 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Prospectus" (PDF). Al-Karim University. Archived from the original (PDF) on 1 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-கரீம்_பல்கலைக்கழகம்&oldid=3927280" இலிருந்து மீள்விக்கப்பட்டது